ஒருவன் இந்துவாயினும் இசுலாமியனாயினும் அவனுக்குச் சனநாயகம் என்பது அடிப்படை உரிமையாகும். அத்தகைய சனநாயகத்தை ஒருமதம், இன்னொரு மதத்தைச் சார்ந்தவனுக்கு மறுக்குமேயானால்-தடுக்குமேயானால்அந்த மதம் எதற்கு? மதங்கள் மனிதனால் கற்பிக்கப்பட்டவையே தவிர கடவுளால் படைக்கப்பட்டவையல்ல! சனநாயகமே மானுடத்தை வழிநடத்தும் மகத்தான மதம்! மனித நேயமேஉலகத்தை வாழவைக்கும் சிறப்பான வேதம்! இவற்றை மறுக்கும் மற்றவையனைத்தும் மானுடத்தின் சேதம்! ஆக,தனியொருவனுக்குச் சனநாயமில்லையெனில் மதங்களை அழித்திடுவோம்!
No comments:
Post a Comment