Pages

Saturday, 30 July 2011

பெயர்  மாற்றம்  என்பது  வெறும்  மொழி   அடையாளமோ   அல்லது       மீட்சியோ அல்ல; அது ஒரு இனத்தின் வரலாற்று மீட்சி ஆகும்.
                                                                                   தலைவர்: தொல்.திருமாவளவன்
தமிழ்ப் பெயர்கள்தான் சாதி, மத, அடையாளமில்லாதவை. ஆகவே, இந்துப் பெயர்களை மாற்றி , தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக்கொள்வது தமிழையும் தமிழினத்தையும்  மீட்சி பெறச் செய்யும் என்பதுடன் மத சார்பின்மையும் பாதுகாக்கப்படும்; சாதி ஒழிப்பும் முன்னெடுக்கப்படும். பெயர் மாற்றத்தால் என்ன புரட்சிகர மாற்றம் நேர்ந்து விடப்போகிறது என்று கேள்வி எழலாம். பெயர்மாற்றம் என்பது வெறும் மொழிக்கான அடையாளம் அல்ல ; அது ஒரு வரலாற்று மீட்சிக்கான அடையாளம் . அதனால்தான் துருக்கியை மறுகட்டமைப்புச் செய்த'முஸ்தபா கமால் பாட்சா' மனிதர்களின் பெயரை மட்டுமல்ல, ஊர்களின் பெயர்களையும் மாற்றினான்.இன்று உலகில் பல்வேறு நாடுகளின் பெயர்களும் அந்த அடிப்படையிலேதான் மாற்றம்பெற்றுள்ளன . அண்மையில் பர்மா, மியான்மரானதும் அப்படியே.               இந்தியாவில், பம்பாய் மும்பையானதும், கல்கத்தா,கொல்கத்தாவானதும் மெட்ராஸ் சென்னையானதும்கூட இந்த அடிப்படையில்தான். ஆகவே, பெயர் மாற்றம் என்பது வெறும் மொழி அடையாளமோ அல்லது மீட்சியோ அல்ல; அது ஒரு இனத்தின் வரலாற்று மீட்சி ஆகும்.

அடங்க மறு புத்தகத்திலிருந்து
மடிப்பாக்கம் - ச.வெற்றிச்செல்வன்
 

No comments:

Post a Comment