அன்பு தோழர்களே!!
என் அன்பு தம்பிகளே !!
வணக்கம் , நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களோடு பேச அல்லது சேர !! என் மகிழ்ச்சி வருத்தம் எதையோ சொல்ல, இந்த முகநூலின் வழியாக வருகிறேன். இன்று என்னுடைய பிறந்த நாள் ஆம் நான் இந்த பூமியில் பிறந்து 45 ஆண்டுகள் முடிந்து 46 வது வயது தொடங்கி இருக்கிறது,

ஆம் தோழர்களே !! இவ்வளவு
வருடங்கள் போனது தெரியவில்லை, இவ்வளவு வயது ஆகிவிட்டது என்றும்
உணர்ந்த தருணமும் இல்லை ஆம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை இந்த
நிலையிலையே என் மனம் இருந்தது, இதோ இந்த ஆண்டு என் பிறந்த நாள் மிக
மிக வெறுமையாக சூன்யமாக வயதான நபரின் உண்மையான மனநிலையில் இந்த நாள்
எனக்கு இருக்கிறது என்னை சுற்றி அண்ணன் அண்ணி மனைவி மகன்கள்
மகள்கள் என்னோடு சந்தோசமோ துக்கமோ சேர்ந்து பயணப்படும் தம்பிகள்
உறவுகள் அனைவரும் இருக்கிறார்கள்.. அவர்கள் உற்சாகமாக என்னை
வாழ்த்தினார்கள் அன்பு காட்டினார்கள் நன்றி சொன்னார்கள். ஆனாலும்
என் மனம் மகிழ்ச்சி அற்று அந்த இருளில் தம்பிகளுக்கு நடுவில் என்
வாசலில் மாடியில் என் கண்கள் தேடுகிறது, எங்காவது ஒளிந்து கொண்டு
என்னை பார்கிறார்களா என்று இல்லை இருள் மட்டுமே இருந்தது. எல்லோரும்
இருந்தார்கள் இத்தனை ஆண்டுகள் என்னை வளர்த்து ஆளாக்கி சீராட்டி
ஆகஸ்ட் மாதம் வரை கூட என் குழந்தை எங்கே என் குழைந்தை எங்கே என்று
தேடி அன்பு பாசம் நேசம் இறக்கம் வீரம் ஊட்டி வளர்த்த என்
வெளிச்சம் பெரும் தெய்வம் என் தேவதை என்னை பெற்று வளர்த்த என் அன்பு
தாய் நான் தொலைத்து வெறுமையாக நிற்கிறேன் கொட்டி கொட்டி
கொடுத்தாலும் வாங்க முடியாத அந்த தூய்மையான அன்பை தொலைத்து அனாதையாக
நிற்கிறேன் .. தோழர்களே !! என் அம்மா இறக்கும் தருவாயிலும் என்னை
குழைந்தை என்றே அழைப்பார்கள் யாரவது அம்மாவிடம் என் வயதை கேட்டால்
அம்மா சொல்வார்கள் குழைந்தைக்கு 28 வயசு தான் என்று சொல்லி
அதிர்ச்சி அளிப்பார்கள் தன வாழ்கையின் கடைசி மூச்சு நிற்கும் வரை
என்னை ஒரு குழந்தையாகவே கருதி பேசுவார்கள் கொஞ்சுவார்கள்,,,, அம்மா
மருத்துவமனையில் கடைசி நாட்கள் இருக்கும் போது நான் உள்ளே சென்றேன்
... அப்போது அம்மா கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு
இருந்தார்கள் நான் போனதும் வேலைக்கு போனியா என்றார்கள் ஆமாம் அம்மா
என்றேன் காசு கிடைச்சுதா என்றார்கள் ஆமாம் என்றேன் சும்மா சொல்லாத
காசு இல்லாம கஷ்டபடுரியா இந்தா இந்த கம்மலை எடுத்துட்டு போ அடகு
வச்சு வியாபாரம் பண்ணி காசு சம்பாதிச்சு சந்தோசமா இருன்னு
சொன்னாங்க.. எனக்கு அந்த தருணத்தில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை
வேணாம் கழட்டாதமா என்று சொலலி பணம் இருக்கு என்றேன்.. நம்பவில்லை
உடனே பாக்கெட்ல இருந்து பத்தாயிரம் ரூபாய் கட்டு ஒன்றை
அவர்களிடம் கொடுதேன் அம்மாவுக்கு முகமெல்லாம் சிரிப்பு எல்லோருக்கும்
வாரி வாரி குடுத்துடுவ உனக்கு கஷ்டம்னா யாரும் தர மாட்டாங்க
நான் வச்சுகுறன் அப்புறம் உனக்கு தேவைனா வாங்கிக்கோனு சொல்லி அங்கு
இருந்த செவிலியரை அழைத்து இந்த கட்டிலின் கம்பியை மடக்கு குழைந்தை
உக்காரணும்னு சொன்னங்க நான் வேண்டாம் என்று மறுக்க செவிலியர் அவர்
உள்ளயே வரகூடாது இருந்தாலும் அனுமதிச்சு இருக்கோம் நீங்க கட்டில்ல
உக்கார வைக்க சொல்றீங்க என்று சொல்ல அம்மாவுக்கு புசுக்குன்னு கோபம்
வந்துடுச்சு உன் கட்டில்ல தான உக்கார கூடாது என் குழைந்த அப்போ
என் மடில உக்காரட்டும் உக்காருப்பா என்று என்னை கட்டாய
படுத்துகிறார்கள் செவிலியர்கள் ஆயா அப்பிடிலாம் பண்ண கூடாது என்று
சொல்ல அம்மா கூப்பிடுடி,, உன் டாக்டர நான் பேசிக்குரன் என் புள்ள
உக்கார கூடாதுன்னு சொல்றனு சண்டை இட செவிலியரை ஜாடை காண்பித்து நகர
சொல்லி அவசர வேலை இருக்கு அம்மா வருகிறேன் என்று சொல்லிவிட்டு
வெளியே வந்தேன்... அன்று அம்மா அவர்கள் மடியில் நான் அமர வேண்டும்
என்று ஆசைபட்டார்கள் முடியவில்ல்லை,, அது தான் நானும் என் அன்பு
அம்மாவும் பேசிய நீண்ட உரை அதற்க்கு மேல் என் அம்மா பேசவே இல்லை..
இன்று நான் அம்மா மடியில் தலை சாய்த்து தூங்க வேண்டும் என்று
ஏங்குகிறேன்,, ஆனால் அந்த தாய் என்னிடம் இல்லை இன்று வெட்டி
எறியப்பட்ட மூங்கிலை போல கிடக்குறேன் ,, இத்தனை ஆண்டுகள் என் வயது
பற்றி சிந்திக்கவே இல்லை முதல்முறையாக சிந்திக்கிறேன், என் வயது
ஆயுள் சீக்கிரம் முடிந்து என் தாயின் கடைசி ஆசை அவர்கள் மடியில்
நான் உக்காரவேண்டும் .. அவர்களோடு சந்திக்கும் நாள் சீக்கிரம் வராதா
என்று ஏங்குகிறேன், அண்ணன் , அண்ணி ,மகன்கள் ,மகள், பேரன், அக்கா
மகன்கள் ,அக்கா மகள்கள் எல்லோரும் என்னை நம்பி என் கைகளை பற்றி
கொன்று நின்றாலும் ஏனோ யாரை பற்றிய கவலையும் எனக்கு வராமல் என்
தாயின் அந்த பரிசத்தை உணரவே மனம் ஏங்குகிறது தவிக்கிறது துடிக்கிறது
வெறுமையான உலகமாய் இந்த பூமி தெரிகிறது என்ன சொல்ல வலிகளை
சொல்ல வார்த்தைகள் அற்று இந்த தருணத்தில் மனம் உடைந்து என் நெஞ்சு
குமுறலை உங்களிடம் சொல்கிறேன் ....
தோழர்களே!!!!! பெற்ற தாயை ஒரூ ஒரு மகனும் போற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் அந்த பொக்கிஷம் தொலைந்து போனால் மீண்டும் கிடைக்காது,, இல்லாத கடவுளை தேடி நேரத்தை வீண் அடிக்காமல் இருக்கும் பெரும் தெய்வத்தை பாதுகாத்து அன்பு காட்டுங்குல் இந்த பூமியில் எல்லாம் எளிமையாக சம்பாதிக்கலாம் ,, ஆனால் உன்னதமான தாயின் அன்பை நீங்கள் சம்பாதிக்கவே முடியாது உயிருக்கு உயிரான அண்ணன் அண்ணி அன்பான மனைவி அண்ணன் மகனும் மகளும் என் மகனும் மகளும் அக்கா மகன்களும் மகள்களும் நிறைந்து காணப்படும் இந்த இல்லம் இதோ வெறுமையாக என் தாயின் குரல் ஒலி இல்லாமல் நிசப்தமாக ஏதோ அந்நிய பூமியில் நான் மட்டும் தனியாக இருபதாய் உணர்கிறேன் ...
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை !!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை !!
என்பார்கள் என் தந்தை எனக்கு மூன்று வயது இருக்கும் போதே இறந்து விட்டார்கள் தாயும் தந்தையும் ஆசனுமாய் இருந்த அந்த பெரும் தெய்வத்தை தொலைத்து வெருமையான் வாழ்க்கை வாழ்கிறேன் ,,,,,
நிஜங்களை ஏற்று கொண்டு வாழ கற்று கொள்ள வேண்டும் ஆனாலும் என்னால் கடந்த காலங்களை ஒரு நொடியும் மறக்க இயலாமல் இந்த நாள் கடந்து போகிறது, இதுவும் ஒரு நாள் கடந்து போகும் ஆம் நானும் நீங்களும் கூட கடந்து போவோம் வெறுமையாக ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,அம்மா உனையே தேடுகிறேன் உன் காலடி மண்ணில் நான் வாழுகிறேன் அழுதால் ஆறுமா சொல் அம்மா என் ஆயுள் குறையுதே வா அம்ம்மா ,,,,,,,,,,,,,,,,,,,,,
மடிப்பாக்கம் ச.வெற்றிச்செல்வன் .

No comments:
Post a Comment