திருவள்ளூர் தொகுதி விசிக வேட்பாளர் தோழர்.ரவிக்குமார் அவர்கள்
இந்த தொகுதியில் அண்ணன் பூவை மூர்த்தி அண்ணன் திருமாவளவன் இவர்களோடு சமுதாய கள பணி ஆற்றி உள்ளார், நம் சமுதாய மக்களுக்கு ஒரு வாய்ப்பு ,நம் வீட்டு பிள்ளையான அண்ணன் திருமாவளவன் அவர்களின் கருத்தையும் கரத்தையும் வலுபடுத்த இந்த மக்களுக்கு அரணாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எழுத்தாளர் துரை ரவிக்குமார் வெற்றிக்காக பாடுபட உறுதி எடுப்போம்
இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே ....
ரவிக்குமார்( 1961 - )
நாகை மாவட்டம்,சீர்காழி வட்டத்திலுள்ள மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் பிறந்த ரவிக்குமார் எம்.ஏ., பி.எல்..,பட்டங்களைப் பெற்றவர். தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ' மன்னன் நந்தனின் மறைக்கப்பட்ட வரலாறு' என்ற தலைப்பில் பி.எச்.டி ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.
விமர்சனம், கவிதை , மொழிபெயர்ப்பு என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். சுமார் நாற்பது நூல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Venomous Touch ( Samya, Kolaktta ,2009) என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் நிறுவனத்துக்காக தமிழ் தலித் எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
நிறப்பிரிகை, தலித்,போதி ஆகிய சிற்றிதழ்களைத் துவக்கி நடத்திய இவர் தற்போது' மணற்கேணி' என்னும் இருமாத ஆய்விதழை நடத்திவருகிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், பயனீர்,செமினார்,ஹிமால் முதலான ஆங்கில இதழ்களிலும்; தினமணி, இந்தியா டுடே,ஜுனியர் விகடன்முதலான தமிழ் ஏடுகளிலும் முன்னூறுக்கும் மேற்பட்டக் கட்டுரைகளை எழுதிஇருக்கிறார் .
பி.பி.சி.தமிழோசை வானொலியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தரத் தமிழக மடலை வழங்கியவர் .
சுமார் இருபது ஆண்டு காலம் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். மக்கள் சிவில் உரிமைக்கழகம் ( பி யு சி எல் ) அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளுக்குத் தலைவராக இருந்தவர். தமிழ்நாட்டில் மரண தண்டனை ஒழிப்புக்கான பிரச்சாரம் இவரால்தான் 1998இல் முன்னெடுக்கப்பட்டது .
2006 - 2011 இல் தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர். அந்த காலக்கட்டத்தில் , நரிக்குறவர் நலவாரியம், புதிரை வண்ணார் நலவாரியம் , வீட்டுப் பணியாளர் நலவாரியம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம், ஓமியோபதி மருத்துவர்கள் நலவாரியம் , அரவாணிகள் நலவாரியம் என ஐந்து நலவாரியங்கள் உருவாக்கப்படுவதற்கும், குடிசைவீடுகளை மாற்றி இருபத்தொரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான திட்டம் அறிவிக்கப்படுவதற்கும் , தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் பணக்கொடை உள்ளிட்ட வசதிகள் மேம்படுவதற்கும் காரணமாக இருந்தவர்.
2010 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதினைப் பெற்றவர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண் பேராயக் குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
No comments:
Post a Comment