தனி ஈழமே ஈழத் தமிழ் மக்களின் ஒரே தீர்வு, அதற்காக எனது எம்.பி. பதவியையும் துறக்கத் தயார்.
தலைவர் தொல். திருமாவளவன்.
தனி ஈழமே ஈழத் தமிழ் மக்களின் ஒரே தீர்வு. அந்தத் தீர்வை அடைவதற்காக எனது எம்.பி. பதவியையும் துறக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தனி ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடந்தது. தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,
தமிழ் ஈழமே தீர்வு என்று இந்த நேரத்தில் நாம் உரக்க முழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தமிழ் ஈழத்தைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். தமிழ் ஈழ கோரிக்கையை யாரும் முன் வைக்க மாட்டார்கள்.
ஏதேனும் ஒரு தீர்வை சொன்னால் அதை ஒப்புக்கொண்டு அங்கே உள்ளவர்கள் அடிபணிந்து கிடப்பார்கள் என்கிற மமதை சிங்கள இனவெறி ஆட்சியாளர்களிடம் உருவாகியிருக்கிறது. அவர்களின் ஆணவத்திற்கு, மமதைக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தமிழர்களின் துயரத்திற்கு தமிழ் ஈழம் அமைந்தால் தான் தீர்வு கிடைக்கும். பல ஆயிரம் தமிழர்களை ரத்த வெள்ளத்தில் கொன்று குவித்த ராஜபக்சே கும்பல் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக என மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் தமிழ் ஈழம் அமைவதை விரும்பவில்லை.
தனி ஈழமே தீர்வு என்று கூறி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்போம். தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காக மட்டும் பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். இந்தக் கோரிக்கைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

No comments:
Post a Comment