Pages

Tuesday 27 September 2011

                                     உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்                                                           விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர்    பட்டியல்-1







நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள்

1.திருவள்ளூர் – வழக்கறிஞர் ஆதி.சுரேஷ்


2.ஆவடி- வழ.இரவிச்சந்திரன்(எ)கதிர்நிலவன
 

3.திருத்தணி – சுப்பிரமணி
 

4.தாம்பரம் – பொறியாளர் சாமுவேல்
 

5.மறைமலைநகர் – கேது (எ) தென்னவன்
 

6.பம்மல் – அதே.சேகர்
 

7.பல்லாவரம் – வழக்கறிஞர் பொற்செழியன்
 

8.வந்தவாசி – கோவிந்தம்மாள்
 

9.திருவண்ணாமலை – வழ.மோகன்
 

10.தருமபுரி – குள்ளப்பாண்டி

11.கிருஷ்ணகிரி – விக்ரம்
 

12.ஓசூர் – முனியப்பா (எ) முத்துக்குமார்
 


13.மேட்டூர் – மெய்யழகன்
 

14.நரசிங்கபுரம் – மு.க.நாராயணன்
 

15.ஆத்தூர் – சோலை.செல்வம்
 

16.நாமக்கல் – பழ.மணிமாறன்
 

17.திருச்செங்கோடு – முருகன்
 

18இராசிபுரம் – பரமேஸ்வரன்
 

19.பள்ளிப்பாளையம் – மணி
 

20.குமாரப்பாளையம் – கோ.அண்ணாதுரை
 

21.சிதம்பரம் – சுஜாதா
 

22.பெரம்பலூர் – சண்முகசுந்தரம்
 

23.உசிலம்பட்டி – பாண்டீஸ்வரி
 

24.கோவில்பட்டி – அ.விஜயா
 

25.அருப்புக்கோட்டை – வழக்கறிஞர் முருகன்
 

26.பெரியகுளம் – இரா.தமிழ்வாணன்
 

27.போடி – ஏ.கே.ஆர்.இரமேசு
 

28.தேனி அல்லிநகரம் – ப.செல்வராசு
 

29.பழநி – லதா தங்கப்பாண்டியன்
 

30.சங்கரன்கோவில் – சு.பூமாரி
 

31.கும்பக்கோணம் – அல்போன்ஸ் மேரி
 

32.கடலூர் – பா.தாமரைச் செல்வன்


-------------------------------------------------------------------------------------------------
பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள்


 

1.மாமல்லபுரம் – சிறுத்தை வி.கிட்டு
 

2.குன்றத்தூர் – அப்துல் வாசித் அகமத்
 

3.இடைக்கழிநாடு – ஸ்ரீதர் (எ) திருவரசு
 

4.செம்பாக்கம் – அப்துல் வகாப்
 

5.கருங்குழி – நித்தியகலா
 

6.அச்சிறுப்பாக்கம் – அ.செ.பாலசுந்தரம்
 

7.பீர்கன்கர்னை – மெ.லட்சுமணன்
 

8.நந்திவரம் கூடுவாஞ்சேரி – இ.ரெ.வாசுதேவ சுகானி
 

9.கீழ்ப் பெண்ணாத்தூர் – அம்பேத்வளவன்
 

10.பென்னாகரம் – கிருஷ்ணன்
 

11.பாலக்கோடு – ஜெயமணி
 

12.பொம்மிடி – சி.மஞ்சுளா
 

13.ஊத்தங்கரை – ஜெயலட்சுமி
 

14.மொடக்குறிச்சி – கமலநாதன்
 

15.ஒலகடம் – துரைராஜ்
 

16.கிள்ளை – மார்க்சிய ஒளி
 

17.காட்டுமன்னார்கோயில் – க.செ.பன்னீர்செல்வம்
 

18.புவனகிரி – வெ.சுதாகர்
 

19.திட்டக்குடி – கார்த்திகேயன்
 

20.விருத்தாசலம் – ராசா முகமது
 

21.கங்கைகொண்டான் – மார்ட்டின்
 

22.செஞ்சி – ம.சிவக்குமார்
 

23.மரக்காணம் – ரமேஷ்குமார் (எ) கேசவ குமார்
 

24.உளூந்தூர்பேட்டை – வெங்கடேஷ் (எ) சிந்தனைச் செல்வன்
 

25.சின்னசேலம் – அம்பிகாபதி
 

26.உடையார்பாளையம் – லதா
 

27.ஆண்டிபட்டி – முத்துராசு
 

28.தாமரைக்குளம் – மு.ஆண்டி
 

29.உத்தமபாளையம் – ஜெயகீதா
 

30.தென்கரை – ஆனந்த்
 

31.ஓடைப்பட்டி – சொ.போதுமணி
 

32.கோட்டையூர் – கண்ணன்
 

33.பள்ளத்தூர் – அ.பெரியசாமி
 

34.தேவதானப்பட்டி – எம்.ராமகிருஷ்ணன்

Saturday 24 September 2011

                                    தமிழ்த் தேசியவாதிகளே! சேரித்தமிழர்களுக்காகவும்   ஒரு சொட்டுக் கண்ணீர்விடுங்கள்!
 


உங்கள் வீடு சாதி வெறியர்களால் கொளுத்தப் பட்டிருக்கிறதா?  அந்தக் கொளுத்தப்பட்ட வீட்டிலிருந்து பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள துணிகளைப் பார்த்துக் கதறியிருக் கிறீர்களா?  வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியும் அந்த நெருப்பில் "கருகிப்'' போனதை முகர்ந்திருக்கிறீர்களா?  எரிகின்ற சேரிச் சாம்பலுக்குள் கிடக்கிற 50 பைசா, 1 ரூபாய் பைசாக்களைத் தேடியிருக்கிறீர்களா?

ஒப்பாரியும் ஓலமுமாய் வழிந்தோடும் கண்ணீருடன் உங்கள் தாய் கதறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?


நள்ளிரவில் சாதி வெறியர்கள் வந்து கதவைத் தட்டினாலும் தட்டுவார்கள் என்று உங்கள் சகோதரிகளைப் பக்கத்து ஊரில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களா?

உங்கள் சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த சாதி வெறியர்களை நள்ளிரவில் எதிர்கொண்டிருக்கிறீர்களா?

குடிக்கிற கிணற்றில் மலத்தைக் கரைத்து ஊற்றி அந்த நீரை குடிக்கச் செய்த கொடூரத்தை அனுபவத்திருக்கிறீர்களா?

செத்துக் கிடக்கும் தம்பியைப் பார்க்க முடியாமலும் அடிபட்டுக் கிடக்கும் அப்பாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமலும் போலீசுக்குப் பயந்து கொண்டு நாள் முழுக்கக் காட்டிலும் மேட்டிலும் பசியும் பட்டினியுமாய் அலைந்து திரிந்திருக்கிறீர்களா?

- அன்றாடம் நடக்கும் சாதிக் கலவரங்களில் தலித்துகள் சந்திக்கும் இந்தக் கொடுமைகள், இலங்கையில் நடைபெறும் சிங்கள இனவெறிக் கொடுமைக்குச்  சற்றும் குறையாததுதான்.

ஈழத்தில் சிங்கள இனவெறியர்களால் தமிழர்களுக்கு என்ன நிலையோ? தமிழகத்தில் உயர்சாதித் தமிழர்களால் தாழ்த்தப்பட்டோருக்கு தினம் தினம் அதே நிலைதான்,

மாவீரன் இமானுவேல் சேகரன், மாவீரன் மேலவளவு முருகேசன் படுகொலைகள் முதல் இன்றைக்குப் பரமக்குடிப் படுகொலைகள் வரை தாழ்த்தப்பட்டவன் ஒவ்வொருவனும் இக்கொடுமைகளை அனுபவித்து வருகிறான்.

இந்த ஒடுக்குமுறை அளவுகோலிலிருந்துதான் ஈழத்தில் தமிழர் மீதான ஒடுக்குமுறையை விடுதலைச் சிறுத்தைகள் எதிர்க்கிறது,  அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் களமாடிய விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறது.  ஒடுக்குமுறை கருத்தியல் வடிவத்தில் வந்தாலும் அல்லது வேறு எந்த வடிவத்தில் வந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

தலித்துகளைப் புறக்கணித்து ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்ட திராவிட அரசியலின் விளைவால்தான் விடுதலைச் சிறுத்தைகள் என்னும் தமிழ்த்தேசிய, சாதி ஒழிப்பு இயக்கம் உருவானது.  ஆனால், தமிழ்த்தேசிய அரசியலிலும்கூட தலித்துகளை ஓரங்கட்டி ஒடுக்க முயற்சிகள் நடப்பதுதான் வேதனையிலும் வேதனையாக உள்ளது.

இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தின் மூத்த தலைவராக மதிக்கப்பட வேண்டிய, மதிக்கப்படக் கூடிய தலைவராக இருக்கின்ற அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் கூட இந்தத் "திராவிடச் சதி'' யில் மாட்டிக் கொண்டு தலித்துகள் விடுதலைக்கு எதிராக இருப்பது மிகவும் வருத்தப்படக் கூடிய அவலமாக இருக்கிறது.

'பொடா'  சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடலு£ர் சிறையிலிருந்து வெளியே வந்த போது, கடலு£ரிலிருந்து சென்னை வரை பட்டாசு வெடித்து வாழ்த்தி வரவேற்றவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.   அது மட்டுமல்ல பழ. நெடுமாறன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின் 'பொடா எதிர்ப்பு இயக்கம்' என்கிற அமைப்பை உருவாக்கி தமிழகம் முழுக்கப் போராட்டங்களை முன்னெடுத்த ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள்.

தலைவர் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என்பதற்கேற்ப, அய்யா பழ.நெடுமாறன் அவர்களை தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பெருமைப்படுத்தியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.  அந்தளவுக்கு அய்யா அவர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் பெரும் மரியாதை வைத்தார்கள்.  ஆனால், அந்த மரியாதை சடசடவெனச் சரிந்து போகும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள் உள்ளன.

2009ஆம் ஆண்டு சனவரி இரண்டாம் நாள் கிளிநொச்சியை இந்திய அரசின் உதவியுடன் சிங்களப் படை கைப்பற்றியது என்ற அந்தக் கொடிய செய்திக்குப்  பின் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் எடுத்த பெரும் முயற்சி சாதாரணமானதல்ல.  திருச்சியில் அய்யா வே. ஆனைமுத்து அவர்கள் நடத்திய மாநாட்டில் பேசும்போது, "அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஒன்று திரட்டி போரை நிறுத்தப் பாடுபடுவேன்'' என்று கூறிவிட்டு ஒவ்வொரு தலைவரின் வீட்டு வாசலுக்கும் அலைந்ததுதான் மிச்சம்.  அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட தோல்வியின் விளைவால்தான், விரக்தியின் விளைவால்தான் சனவரி 16ஆம் நாள் மறைமலைநகரில் சாகும் வரை உண்ணாநிலையை மேற்கொண்டார். 

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துத் தலைவர்களையும் ஒன்று  சேர்க்க எழுச்சித் தமிழர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததற்குக் காரணம் அய்யா நெடுமாறன் அவர்கள்தான்.  தமிழ்த் தேசியக் களத்தில் மூத்த முதிர்ச்சியான தலைவராக இருந்து முன்னெடுக்க வேண்டிய இப்பணியை 'கடைநிலை'யிலிருக்கிற தொல். திருமாவளவன் அவர்கள் எடுத்ததால்தான் அந்த முயற்சியை முறியடித்தார் என்பதை அதிலிருந்து உள் அரசியலாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

'மேதகு பிரபாகரன்', 'தமிழ்த்தேசியம்' என்கிற இந்த நெருப்புச் சொல்லாடலை 'பண்டிதத் தமிழ்' போல முடக்கி ஒரு வளையத்திற்குள் வைத்திருந்தவர்தான்  அய்யா நெடுமாறன் அவர்கள்.  அதை உடைத்து தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும், சேரிகள் வரை கொண்டு சேர்த்த பெருமை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களையே சாரும்.  அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே சாதி ஒழிப்பை முதன்மைப்படுத்திச் செயல்படும், தேசிய இன விடுதலைக்காகக் களமாடும் ஒரே தலித் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள்தான்.  "இந்திய தேசியத்திற்கு மாற்று தமிழ்த் தேசியம்''தான் என்று பிரகடனப்படுத்திய இயக்கமும் விடுதலைச் சிறுத்தைகள்தான்.  ஈழத் தமிழருக்குக் குரல் கொடுப்பதும் தலித் அரசியல்தான் என்று முழங்கி, விடுதலைச் சிறுத்தைகளின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளிலும், காதணி விழாக்களிலும், பிறந்த நாள் விழாக்களிலும் மிகத் துணிச்சலாக மேதகு பிரபாகரன் அவர்களது படங்களைப் போட்டு கடைக்கோடி மக்களிடத்திலும்கூட தமிழ்த் தேசிய அரசியலைப் பரப்பியது விடுதலைச் சிறுத்தைகள்.  விடுதலைப் புலிகளை ஆதரித்தால் "பொடா, தடா'' என்று ஜெயலலிதா அரசு அனைவரையும் கைது செய்து சிறைப்படுத்தி, அச்சுறுத்திக் கொண்டிருந்த போதே துணிச்சலாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களது படங்களைப் பேனர்களாகப் போட்டு அரசுக்கு சாவல் விட்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.  அந்தளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலில், ஈழ விடுதலை அரசியலில் சமரசமில்லாமல் களமாடுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.

சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசிய விடுதலை, பெண்ணிய விடுதலை, வர்க்க பேத ஒழிப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு என்கிற ஐந்து கொள்கைகளைக் கட்சியின் உயிர் முழக்கமாக அறிவித்து தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கி வருபவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள்.

தமிழகத்தில் நடக்கும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஒடுக்குமுறைகளை உடைக்கக் களமாடும் விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்த் தேசியத் தளத்தில் எந்தக் கட்சிகளும் முன்னெடுக்காத மாநாடுகளை, போராட்டங்களை நடத்தி தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் நெருப்பைப் பற்ற வைத்தது. ஆளும் அரசு ஒடுக்குமுறைச் சட்டங்களைக் காட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்த போதுதான், "யார் அமைதியாக இருந்தாலும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்'', என்று கருத்துரிமை மாநாடு நடத்தி அரச அடக்குமுறையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர்கள் சிறுத்தைகள்.

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கும் பணி ஒருபுறம், தேசிய இன விடுதலைப் பயணம் மறுபுறம் என ஒரே நேரத்தில் இரண்டு போரை நடத்தி வரும் எழுச்சித் தமிழரை தமிழ்த் தேசியக் களத்திலிருந்து அப்புறப்படுத்த கடந்த காலங்களில் முயற்சிகள் நடைபெற்றன.  அதுவும் எந்த ஈழ விடுதலை அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தாரோ அந்த அரசியலை வைத்தே அப்புறப்படுத்த முயற்சிகள் நடந்ததுதான் வேதனையிலும் வேதனை.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் "அ.தி.மு.க - தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கங்கள் மட்டும் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம்!" என்று தலைவர் திருமாவளவன் விடுத்த வேண்டுகோளை தமிழ்த் தேசியவாதி ஒருவர்கூடக் கண்டுகொள்ளவில்லை.  மாறாக, அ.தி.மு.க. அணிக்கு இழுக்க பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்தார்கள். 

கொள்கைரீதியாகவே தமிழ்த் தேசிய அரசியலையும் தமிழீழ விடுதலையையும் வெளிப்படையாக எதிர்த்து அரசியல் செய்யும்  ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுக்கவே தமிழ்த்தேசியவாதிகள் ஆர்வம் காட்டினார்களே ஒழிய, தமிழ்த் தேசியக் கூட்டணி ஒன்று உருவாகக் கிடைத்த வாய்ப்பை யாரும் பயன்படுத்த விரும்பவில்லை.  ஜெயலலிதாவின் அரசியல் 'புரோக்கராகச்' செயல்படும் நடராஜனின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துபவராகவே அய்யா நெடுமாறன் செயல்பட்டார் என்பதுதான் ஆறாத வடுவாக தமிழக அரசியல் வரலாற்றில் பதிவாகியுள்ளது.  இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல.  அய்யா பழ. நெடுமாறன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவரும் அல்ல.  அவரது கடந்த கால அரசியல் என்பது பார்ப்பனியத்தை உள்வாங்கிய அல்லது பார்ப்பனியத் தலைமையைக் கொண்டு வர முயற்சி செய்த சோ, சுப்ரமணியசாமி, இந்து ராம் ஆகியோருக்கு நிகராகவே அமைந்தது,  சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதாவின் இன்னொரு அரசியல் புரோக்கராகத்தான் அய்யா நெடுமாறன் செயல்பட்டார்.

அய்யா பழ. நெடுமாறன் அவர்களின் விருப்பப்படி அ.தி.மு.க. கூட்டணிக்கு வராத ஒரே காரணத்திற்காக "துரோக''ப் பட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் மீது தமிழ்த் தேசியவாதிகள் சுமத்தினார்கள்.  கால் நு£ற்றாண்டாய் ஈழ விடுதலையே உயிர் மூச்சு என்று செயல்பட்ட எழுச்சித் தமிழர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியபோது தமிழ்த் தேசியத்தின் மூத்த தலைவராக மதிக்கப்படும் பழ. நெடுமாறன் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் அமைதி காத்ததை, அந்தக் குற்றச்சாட்டை அவரும் ஏற்றுக்கொண்டதாக அல்லது அவரே சுமத்துவதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.  "திருமாவளவன் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் கூட, தமிழ்த்தேசிய அரசியலில் ஈழ விடுதலை அரசியலில் நேர்மையாகச் செயல்படுபவர்'' என்று சொல்லி இருக்கலாம்.

கேவலம் தேர்தல் அரசியலுக்காக, தேர்தல் ஆதாயத்திற்காக இலங்கைத் தமிழர்ப் பிரச்சனையைப் பேசிய ஜெயலலிதாவை நம்பும் தமிழ்த்தேசியவாதிகள், கால் நு£ற்றாண்டாய் ஈழ விடுதலையே தமது மூச்சாகக் கொண்டு செயல்படும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் நேர்மையைச் சந்தேகிப்பது எவ்வளவு பெரிய கொடுமை?  மேயுற மாட்டைக் கெடுக்கிற நக்குற மாடுகளாக தமிழ்த் தேசியவாதிகள் மாறிப் போனதற்கு யார் காரணம்? காற்று நுழைய முடியாத இடத்தில் கூட தமிழ்த் தேசிய அரசியலைக் கொண்டு போய்ச் சேர்த்த எழுச்சித் தமிழருக்கு துரோகப் பட்டமா?  இதையெல்லாம் கண்டும் கேட்டும் பழ. நெடுமாறன் அவர்கள் அமைதி காத்தது ஏன்?  தமிழ்த் தேசியத் தனி அணி அமைக்க எழுச்சித் தமிழர் எடுத்த முயற்சிக்குத் துணையாகச் செயல்பட்டிருக்கலாமல்லவா!  மூத்தவர், பொறுப்புள்ளவர், அனுபவமிக்கவர், என்று மதிக்கப்படக்கூடிய அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு இதில் அக்கறை இருக்க வேண்டாமா? விடுதலைச் சிறுத்தைகளின் இந்தத் தமிழ்த் தேசிய அரசியலை அப்படியே முன்னெடுக்க வேண்டாமா?  இதையெல்லாம் செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகள் மீது அவது£று பரப்பியவர்களோடு கொஞ்சிக் குலாவுவது "அவது£றுகளுக்கு'' ஆதரவாகச் செயல்படுவதாகத் தானே அர்த்தம்?  உள்நோக்கம்தான் என்ன?  உள் அரசியல்தான் என்ன?  விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல, சேரியின் கடைசி இளைஞனின் இதயத்தை ரணமாக்குகின்றன இப்போக்குகள்.

தமிழீழ விடுதலைக் களத்தில் விடுதலைப் புலிகளைப் போலக் களமாடிய விடுதலைச் சிறுத்தைகளை அப்புறப்படுத்தி விட்டு நெடுமாறன் போன்றவர்கள் என்ன அரசியலை முன்னெடுக்கப் போகிறார்கள்?  யாரை வைத்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கப் போகிறார்கள்?

சேரிகளை புலிகளின் முகாம்களாக மாற்றிய சிறுத்தைகளின் அடிப்படையான அரசியலான தலித் விடுதலையில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது?

சிங்களரின் கொடுமைகளைக் கண்டும் பதறி தமிழகம் முழுக்கப்  போராட்டங்களை நடத்திச் சிறை சென்றவர்களில் தமிழத்தில் தலித்துகள்தான் அதிகம்.  26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகளைச் சார்ந்த தலித்துகள்தான்.

தமிழீழ விடுதலைக்காக சேரிகள் எல்லாம் கொதித்தெழுந்து அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தியது, நடத்திக் கொண்டும் இருக்கின்றோம்.  பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் து£க்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுக்க விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழகத்தை உசுப்பியது.  இப்படிப் பல போராட்டங்களை, தலித் மக்களின் விடுதலையை முன்வைத்துப் போராடும் அமைப்பான விடுதலைச் சிறுத்தைகள் நடத்தியது.  ஆனால், கடந்த செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் 7 தலித்துகள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை மனித நேயத்தைச் சாகடிக்கிற செயலாக அனைவரும் பார்க்கிறார்கள்.  பா.ஜ.க. கூட இதனைக் கண்டித்து அறிக்கை விடுத்தார்கள்.

ஆனால், இக்கொடிய அடக்குமுறையைக் கண்டித்தோ தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடுமையைக் கண்டித்தோ தமிழ்த் தேசியத்தின் மூத்த தலைவர் பழ. நெடுமாறன் எந்த அறிக்கையும் கொடுக்காதது ஏன்?

அவருடைய தற்காலிகத் தலைவர் ஜெயலலிதாவைப் போலவே தலித்துகள் கொல்லப்படுவதை இவரும் நியாயப்படுத்துகிறாரா?  அல்லது அதை இனக் கலவரமாகப் பார்க்கிறாரா?  அல்லது ஜெயலலிதா வருத்தப்படுவார் என்று கருதி அமைதி காக்கிறாரா?  அல்லது அடுத்த நெற்கட்டும் செவல் பூலித்தேவன் நிகழ்ச்சியில் நடராஜனுடன் கலந்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்பதால் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்க மனம் இல்லையா? 

செத்து மடிந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழரில்லையா? நேரில் செல்ல முடியவில்லையென்றால் ஏன் ஒரு இரங்கல்கூட அனுப்ப முடியவில்லை. 

ஈழத் தமிழர்கள் படும் கொடுமை கண்டு கண்ணீர்விடும் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் சேரித் தமிழர்கள் சாகடிக்கப்படும்போதும் ஒரு சொட்டுக் கண்ணீராவது வடித்தால்தானே, அவர் ஈழத் தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் உண்மையானதாக இருக்கும். மூவரின் து£க்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி எதிர்வரும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் நாள் தமிழகம் முழுக்கப் பட்டினிப் போராட்டத்தை அறிவிக்கும் அய்யா நெடுமாறன் அவர்களால் தமிழகம் முழுக்க அல்ல, எங்காவது ஓரிடத்திலாவது பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டமோ பட்டினிப் போராட்டமோ நடத்தினால் என்ன குடிமுழுகி விடப் போகிறது?  சிங்கள இனவெறிக் கொடுமையைக் கண்டிக்கும் மனம் சாதி வெறியை மட்டும் கண்டிக்க மறுப்பது ஏன்?

திராவிட அரசியல்தான் தலித்துகளை அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும் புறக்கணித்தே வந்தது.  தலித்துகளைக் கொன்று குவித்தே வருகிறது.  தமிழ்த் தேசிய அரசியலிலும் தலித்துகளை இப்படித்தான் நடத்த வேண்டுமா?

இதற்கெல்லாம் பதில் சொன்னால்கூட தகுதிக் குறைவாக அய்யா நெடுமாறன் அவர்கள் கருதலாம்.  ஏனென்றால், கடந்த ஆகத்து 31.8.2011 அன்று மங்கலவாடி கிராமத்தில் கரும்புலி செங்கொடி வித்துடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று எழுச்சித் தமிழர் பேசும் போது, "தமிழ்த் தேசியக் களத்தில் ஒன்றிணைந்து போராட விடுதலைச் சிறுத்தைகள் தயாராக இருக்கிறது.  உங்களோடு சமமாக இல்லை, நு£றடி பின்னால் நின்று, ஆயிரம் அடி பின்னால் நின்று களமாடத் தயாராக இருக்கிறோம் என்றார். இறுதியாக பேசிய அய்யா நெடுமாறன் அவர்களுக்கு எழுச்சித் தமிழர் பேச்சு புரியாமலா போயிருக்கும்?  அந்த உணர்வை உட்கொள்ளாமல் இருந்திருப்பாரா?  அதற்குப் பதில் சொல்லாமலே நழுவிக் கொண்டாரே.  "திருமாவளவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?'' என்கிற எண்ணமா?  அல்லது ஒன்றிணைந்து செயல்படத் தேவையில்லை என்கிற எண்ணமா?  இதைத் தவிர வேறென்ன அய்யா நெடுமாறன் அவர்களின் செயல்பாட்டில் இருந்துவிடப் போகிறது!  2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மானுடத்தில் தமிழ்க்கூடல் மாநாட்டில் பேசிய எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் "இங்கே அமையக்கூடிய தமிழீழ அரசு சாதியற்ற அரசாக அமைய வேண்டும்.  அமையுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த விடுதலைப் புலிகளின் கலை இலக்கியப் பண்பாட்டுக்  கழகத்தின் தலைவர் புதுவை ரத்தின துரை அவர்கள், "நாங்கள் அமைக்கும் தமிழீழத்தில் சாதி ஒழிக்கப்படும்.  அப்படி இல்லையென்றால், அந்தத் தமிழீழமே தேவையில்லை'' என்று பதில் கூறினார்.

இந்த நேர்மையும் நெஞ்சுரமும் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்று, அவர்களை ஆதரித்துச் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் ஒவ்வொரு தமிழ்த் தேசியவாதிக்கும் இருக்க வேண்டும்.  இப்போது சொல்லுங்கள், இந்த நேர்மையும் நெஞ்சுரமும் அய்யா நெடுமாறன் அவர்களுக்கு இருக்கிறதா? 
 
                                                                                                           வன்னி அரசு
 
  

Tuesday 20 September 2011

                       'நம்புங்கய்யா... நானும் ரவுடிதான்!'

 

'அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்திரண்டு அரிவாளாம்!' - ஊரையும் மரத்தையும் சுற்றித் திரிகிற ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகளைப் பார்த்து ஊர்ப் பெரிசுகள் இப்படித்தான் கிண்டலிப்பார்கள்.  சுருக்கமாக 'கைப்புள்ள வடிவேலு'வைப் போன்ற கேரக்டர்களைத்தான் இப்படிச் சொல்வார்கள்.

தமிழக அரசியலிலும் ஒரு கைப்புள்ள சுற்றிக்கொண்டு திரிகிறார்.  அவர்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!  காங்கிரஸ் கட்சி ஏதோ தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவே முடியாத கட்சி போலவும், எல்லா கட்சிகளும் காங்கிரஸ் வந்தால்தான் ஜெயிக்கவே முடியும் என்று கெஞ்சுவது போலவும் இளங்கோவன் உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்.  கைவிலங்கு உடைஞ்சதாகவும், விடுதலை அடைந்து விட்டதாகவும், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் உளறிக்கொண்டு திரிகிறார்.  ஏதோ தனித்துப் போட்டியிட்டு 10 மாநகராட்சிகளையும், 152 நகராட்சிகளையும், ஒட்டுமொத்த ஊராட்சிகளையும் கைப்பற்றுவது போல காமெடி செய்து வருகிறார்.


                                                பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டு பூம்பூம் மாட்டுக்காரனைப் போல திராவிடக் கட்சிகளின் வாசலில் நின்று, கொடுப்பதை வாங்கிக்கொண்டு போகும் இந்தக் காங்கிரசுக் கோமாளிகளின் எகத்தாளத்தையும், லொள்ளுவையும் தாங்க முடியலடா சாமி!  மாறி மாறி திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறியே பயணப்பட்ட ஒட்டுண்ணிகள்தான் இன்றைக்குத் தனித்துப் போட்டியென சத்தியமூர்த்திபவனில் வடிவேலு காமெடியைப் போல செத்து செத்து விளையாடத் தயாராகி விட்டார்கள்.

                                                         தமிழகத்து உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் என்றைக்குமே குரல் கொடுக்காத காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலிருந்து ஓரங்கட்டி எவ்வளவோ காலமாகிவிட்டது.  பா.ஜ.க. என்கிற வெளிப்படையான மதவெறிக் கட்சிக்கு மாற்றாக, மறைமுகமான மதவெறிக் கட்சியான காங்கிரசை வேறு வழியில்லாமல் மத்தியில் ஆதரிக்க வேண்டிய இக்கட்டான நிலையில், பல மாநிலக் கட்சிகள் இந்தச் சனியனை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரே கட்சி காங்கிரஸ்தான்.

                                             பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் து£க்குத்தண்டனை ரத்து செய்யக்கோரி தமிழகமே கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கும்போது மூவரையும் து£க்கில்போட வேண்டும் என்று, சொன்னதோடு மூவரையும் சிறைக்குள்ளேயே நுழைந்து கொன்று போட்டிருக்க வேண்டும் என்று பொறுக்கிக் கும்பலின் தலைவன் போல பேசிய புடுங்கிதான் இளங்கோவன்.

                                                    பரமக்குடியில் 7 தலித்துகள் போலிஸ் நாய்களால் குதறிக் கொல்லப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து பா.ஜ.க.கூட போராட்டம் நடத்தியது.  ஆனால் இந்த காங்கிரஸ் ஜந்துக்கள் ஒருவர் கூட இதுவரை அதனைக் கண்டித்துக்கூட அறிக்கை கொடுக்கவில்லை.  1956ஆம் ஆண்டு தலித்துகள் தேர்தல் நேரத்தில் காமராசரை ஆதரித்த ஒரே காரணத்துக்காகத்தான் முத்துராமலிங்கத் தேவரும் அவரது ஆதரவாளர்களும் சாதிவெறியுடன் இம்மானுவேல் சேகரனை வெட்டிக்கொன்றார்கள்.  காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அன்றைக்கு காவல்துறை கலவரத்தை அடக்க கீழத்து£வல் கிராமத்தில் கலவரத்தில் ஈடுபட்ட முத்துராமலிங்கத் தேவர் ஆதரவாளர்களைச் சுட்டுக்கொன்றனர்.  அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு அதே காவல்துறையை வைத்து தலித்துகளைச் சுட்டுக்கொன்று பழி தீர்க்கின்றனர்.  அன்றைக்கு முத்துராமலிங்கத் தேவரை கைது செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அறிக்கை விட்டவர் தந்தை பெரியார்.  இன்றைக்கு தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டு காவல்துறைக்கு ஆதரவாக ஜால்ரா போடுபவர் பெரியாரின் பேரன் இளங்கோவன்.

                                                     அது  மட்டுமல்ல, சிறைக்குள் புகுந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை கொலை செய்ய வேண்டும் என்று பேசுகிற, கொலைவெறி உணர்வுள்ள இளங்கோவனுக்கு 7 தலித்துகள் கொல்லப்படுவதை ஞாயப்படுத்தத்தானே முடியும்.  இக்கொடூர மனநிலையிலிருந்துதான் காங்கிரஸ்காரர்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள்.  போராடும் மக்களுக்கு ஆதரவாகவோ, அப்போராட்டத்தில் பங்கெடுக்கவோ கூட மனமில்லாத காங்கிரஸ்காரர்களின் மக்கள் விரோதப் போக்கு தமிழகத்தில் பல்வேறு குரலாய், வடிவமாய் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

                                                   தமிழர்களின் உரிமைகளான முல்லைப் பெரியாறு பிரச்சனையாகட்டும், காவிரிப் பிரச்சனையாகட்டும், கண்ணகி கோயில் பிரச்சனையாகட்டும், தலித்துகள் பிரச்சனையாகட்டும், எந்த உரிமைகளுக்கும் குரல்கொடுக்காத ஊமையர்கள்தான் இந்தக் காங்கிரஸ் கொள்ளையர்கள்.  ஆனால் தமிழகத்தை மட்டும் மீண்டும் ஆள வேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் நாயைப் போல காங்கிரஸ்காரர்கள் அலைகிறார்கள்.

                                                          தமிழர்களின் உரிமைகளுக்கும் பண்பாட்டுக்கும் எதிராகச் செயல்படும் இளங்கோவன் போன்ற தேசபக்திச் செம்மல்களை தேர்தல் களத்தில் வீழ்த்திய பிறகும் இன்னமும் திருந்தியபாடில்லை.  மக்கள் புறக்கணித்து வீழ்த்துக் கட்டிய பிறகும் வடிவேலு ஒரு படத்தில் கூறவது போல 'யோவ் நானும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்.  நானும் ரவுடிதான்யா... நம்புங்கய்யா...' என்று இளங்கோவன் போன்ற காங்கிரஸ்காரர்கள் சொல்லித் திரிகிறார்கள்... பாவம்!
                                                                                                            -  வன்னி அரசு

Wednesday 14 September 2011

                             பரமக்குடியில் தலித்துகளை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கவர்னர் ரோசய்யா விடம் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் மனு .
 


இன்று மாலை எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் .அவர்கள் கவர்னர்ரோசையா அவர்களை இல்லத்தில் சந்தித்தார் . அப்பொழுது

* பரமக்குடி போலீஸ் அராஜகத்தில் உயிர் நீத்தவர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் .

*காவல்துறையால் 7 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

* ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப் பரிந்துரைக்க வேண்டும்.

* பரமக்குடி போலீஸ் அராஜகத்தில் உயிர் நீத்தவர்கள் குடுபத்திற்கு தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் .

*பரமக்குடியில் தலித்துகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் .

*உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி கவர்னர் ரோசையா அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன் மனு அளித்தார் .

Saturday 3 September 2011

                                     தமிழ் தேசிய உணர்வாளர்களே!
                                தியாகத்திலும் சாதி பார்க்காதிர்கள்!

 


                                                         

                                                                                   அன்பு தோழர்களே வணக்கம்!
  ஈழத் தமிழர்கள் மீது போர் தொடுத்து மொத்த இனத்தையே கருவருத்த கொடுங்கோலன் ராஜபக்சேவையும் கோத்தபய ராஜபக்ஷேவையும் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் . இலங்கை நாட்டின் மீது பொருளாதார தடை விதித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவையும் கோத்தபய ராஜபக்சேவையும் கைது செய்ய வேண்டும் என்ற கருத்தும் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்தது.

                                                                   தமிழ்நாட்டிலும் அந்த கோரிகையை வலியுறுத்திபோராட்டம் நடத்தி வந்த வேலையில்-பேரறிவாளன், சாந்தன், முருகன்- இவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்ற பேரிடியை இந்திய அரசு தமிழக மக்கள் மீது திணித்தது.
                                                                  உடனே மூன்று அப்பாவி தமிழர்களை காக்க ஒட்டு மொத்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்- பட்டி தொட்டி எங்கும் அதன் வெப்பத்தை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்.தொல். திருமாவளவன் கொண்டு சென்றார் .
மாவட்ட தலை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் சிறுத்தைகள் உடன் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஜயா.ராமதாசுடன் தலைவர்.திருமாவளவன் சேர்ந்து 4 நாட்களிலேயே மறைமலை நகரில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டின் அறை கூவலாக 6ம் தேதி தமிழ்நாட்டின் 8 திசைகளில் இருந்தும் வேலூர் நோக்கி வாருங்கள். 8ம் தேதி வேலூர் சிறையை முற்றுகை இடுவோம். அதனால் எந்த வித நெருக்கடிகள் இன்னல்கள் சோதனைகள் வந்தாலும். 


நாம்அதை ஏற்றே ஆகவேண்டும் 3 தமிழர்களை காப்பாற்றியே தீர வேண்டும். இழந்த உயிர்கள் ஏராளம். இனி ஓரு உயிரையும் இழந்து விட கூடாது என்று தலைவர் திருமா சூளுரைத்தார் .அதை கேட்டு பாட்டாளி தோழர்களும் விடுதலைச் சிறுத்தைகளும். இன்னும் தங்களை வேகப்படுத்தி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கூட்டத்தில் இருந்த நேரத்தில் தான்? ஈரக் குலையே அறுந்து போகும் உணர்வை தந்தது ஒரு செய்தி! ஆம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர். தொல்.திருமாவளவன்அவர்கள் மீது உளமாற அன்பு செலுத்தும் அன்பு தோழி மகேஷ் ஜெசி அவர்கள் நடத்தி வந்த மக்கள் மன்றத்தை சேர்ந்த அன்பு தங்கை செங்கொடி 3 தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தமிழர்களுக்கு அறை கூவல் விடுத்துஅந்த வீர மங்கை தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டார். என்ற மரண செய்தி தான் அது.

ஆம் அங்கிருந்த அத்தனை தோழர்களும் துடித்து போனார்கள் தலைவர் .தொல்.திருமாவளவன் உடனே தங்கைக்கு வீர வணக்கம் செலுத்தி யாரும் இனி இப்படி செய்ய கூடாது என்று வேண்டுகோல் குடுத்தார் -- உடனே கூட்டத்தை முடித்து  காஞ்சிபுரம் சென்று GH மருத்துவமனை வாசலில்  மக்களுடன் கூட அமர்ந்து துக்கத்தை பகிர்ந்து கொண்டார்.
 

                                                  அடுத்து கரும்புலி செங்கொடிக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் .உடன் இருந்த தோழர்களிடம் நீங்கள் எல்லோரும் இரவு இங்கேயே இருந்து தேவையான உதவிகளை செய்து. தங்கை செங்கொடிக்கு இறுதி ஊர்வலம் நல்லபடியாக நடத்தவேண்டும் என்று சொல்லி- பொது செயலாளர் சிந்தனைசெல்வன் மற்றும் காஞ்சி அருள் டேவிட்- மற்ற தோழர்களிடம் சொல்லி சென்னை புறப்பட்டார்.
அதே போல அங்கே ம.தி.மு.க. சத்யா, பாலவாக்கம் சோமு மட்டும் தங்கி பணியாற்றினார்கள். மறுநாள் காலையில் காஞ்சியை நோக்கி சிறுத்தைகள் படை எடுத்தார்கள்
- வின் அதிர முழக்கம் எழுப்பி காஞ்சி மக்களை அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் விதமாக செய்தார்கள்.                                                                     பல தலைவர்கள் வந்தார்கள்.வீர வணக்கம் செய்தார்கள்
தங்கையின் வீர மரணம் தமிழ் நாட்டையே உசுப்பியது.
மாணவர்கள் , வழக்கறிஞர்கள் அனைவரும் போராடினார்கள். ஏன் தமிழக அரசையே அந்த போராட்டம் உசுப்பியது என்பது தான் உண்மை.
ஆம் முதல்வர் ஜெயலலிதா அவர்களே தீர்மானம் இயற்றக் கூடிய அளவுக்கு தங்கை செங்கொடியின் வீர மரணம் தமிழர்களை உசுப்பி விட்டது என்பது வரலாறு காணாத உண்மை .சட்டவல்லுனர்களின் விவாததால் நீதிமன்றமும் 8 வார காலத்துக்கு தடையும் விதித்து உள்ளது. தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்பது தங்கை செங்கொடிக்கும்
அந்த வீர மங்கை செய்த தியாகத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்பது மறுக்க முடியாத உண்மை!
                                                                 இருளில் பிறந்து இருளில் வாழ்ந்து தன்னை இருளில் புதைத்துக்கொண்டு உணர்வு அற்ற தமிழர்களுக்கு வெளிச்சம் மூட்டிய நம் தங்கை தியாகி செங்கொடி இன்று இருளை உடைத்து மின்னலாய் வெளிச்சமாய் இருக்கிறாள் .
                                                                   அப்பேர்ப்பட்ட கரும்புலி வீரமங்கை செங்கொடிக்கு இந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் தகுந்த மரியாதை செய்தார்களா?
அந்த தியாக நெருப்பை உலகுக்கு உயர்த்தி காட்டாத மர்மம் என்ன?
கரும்புலி முத்துகுமாரின் தியாகத்தை உலகத்திற்கு சொல்ல ஓடி ஓடி வேலை செய்த வியாபாரிகள் எங்கே?
அவரின் அஸ்தியை 4 திசைகளிலும் கரைக்கவேண்டும் என்று சொல்லி வேலை செய்த கண்ணியவான்கள் எங்கே ?
                                                      தமிழர் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்யும் தலைவர்கள் எங்கே ?
இங்கே எல்லோரும் சாதியாய் நிற்கிறார்கள் நான் மட்டுமே தமிழராய் நிற்கிறேன் என்று சொன்ன தலைவர் ஏன் செங்கொடியின் தியாக உடல் அடக்கத்திற்கு தன் தொண்டர்களுக்கு அழைப்பு விட வில்லை ! முயற்சிக்கவில்லை?
இருளில் பிறந்தவளின் புகழ் இருட்டிலேயே புதையட்டும் என்ற என்னமா ?
ஒடுக்க பட்டவனுக்கும் முடக்கபட்டவனுக்கும்!
தடுக்க பட்டவனுக்கும்! படைக்கபட்ட திருமாவளவன் இருக்கிறார்
நாம் ஏன் அதை செய்ய வேண்டும் என்ற என்னத்திநாலா???
தோழர்களே இங்கே தான் இந்த கேடு கெட்ட சாதி புத்தி தீண்டாமை எப்படி வெளிப்படுகிறது என்பதை பார்க்கிறோம் .

ஆம் தோழர்களே!
முள்ளிவாய்க்காலில் உச்சகட்ட போர் நடந்த போது உலக தமிழர்களே!
ஈழத் தமிழர்களை காப்பற்றுங்கள் என்று சொல்லி உலக மக்களுக்கு தன் கடிதம் மூலம் செய்தி அனுப்பி அதில் தேசிய தலைவர் பிரபாகரன் என் இறப்பை எப்படியும் தெரிந்து கொள்வார்- அண்ணன் திருமாவிற்கு உடனே என் இறப்பை தெரியப்படுத்துங்கள் என்று சொல்லி உயிர்தியாகம் செய்த மாவீரன் முத்துக்குமார் உடல் வட சென்னையில் இருந்த போது வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன் கடைகளை உடனே அடைத்து இறுதி ஊர்வலத்தில்அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விட்டார்.
அணைத்து கடைகளும் அடைத்து அவர்களும் வீர வணக்கம் செலுத்தினார்கள். பல தமிழ் தேசிய உணர்வாளர்களும் தங்களின் அமைப்பு மூலம் அறிக்கை விட்டு பெரும் திரளான தோழர்களை அந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க செய்தனர்
                                                       மாவீரன் முத்துக்குமார் சவ ஊர்வலத்தில் ஆயிரக்கனக்கான தோழர்கள் பங்கெடுக்க செய்து அவர் செய்த மாபெரும் தியாகத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.
                                                           அவரின் அஸ்தியை தமிழ் நாட்டின் 4 திசைகளிலும் கரைக்க வேண்டும் என்று சொல்லி திசைக்கு ஒரு தலைவர்கள் அந்த அஸ்தியை எடுத்து ஊர்வலம் சென்றார்கள் மரியாதை செய்தார்கள் .
விடுதலைச் சிறுத்தைகள் அந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல கரும்புலி முத்துகுமாரின் தியாகத் திரு உருவ சிலையையும் அவர் இல்லத்திலேயே தலைவர் திருமாவளவன் அவர்கள் நிறுவினார்.
                                                                        அதை கூட திறக்க கூடாது என்று பல இன்னல்களை இடைஞ்சல்களை உருவாக்கினார்கள். ஆனால் தடைகளை உடைத்தே பழக்கப்பட்டு போன நம் தலைவர்
அத் தடைகளை வெறும் பூக்களை கொண்டே உடைத்து அந்த தியாக செம்மல் முத்துக்குமாருக்கு தோழர் சங்கத்தமிழன் மூலம் திருஉருவ சிலை நிறுவினார். நாம் அங்கே சாதி பார்க்கவில்லை அங்கே அந்த மாவீரனின் தியாகத்தை மட்டுமே பார்த்தோம். தியாகியின் பெயரை அந்த தியாகத்தை எங்கள் நெஞ்சிலே பச்சை குத்திக் கொண்டு போராடும் பச்சை தமிழர்களாகதான் சிறுத்தைகள் இருக்கிறார்கள் .

ஆனால் தங்கை செங்கொடிக்கு நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாநகரில் அனைத்து கடைக்ளும் திறந்து இருந்தன.

தமிழ் தேசிய உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

                                                        ஆனால் யாரும் தோழர்களை அணி திரட்டி வரவில்லை? தலைவர்கள் கூட தாங்கள் மட்டும் வந்து வீரவணக்கம் செய்து போனார்களே தவிர தொண்டர்கள் பங்கேற்க அறை கூவல் விடுக்கவில்லை. ஏன்? தோழர் மகேஷ் நடத்தும் மக்கள் மன்றம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர். தொல். திருமாவளவன் அவர்கலோடு இணைந்து பணியாற்றுகிறது என்ற காரணத்தினாலா? செங்கொடியின் உடல் மருத்துவமனையில் இருந்த போது சிறுத்தைகள் மட்டுமே அதிக அளவு இருந்த காரணத்திணாலா?

                                                                இல்லை இருட்டு சமூகமான இருளர் சமுதாயத்தில் பிறந்த காரணத்திணாலா? என்ன காரணம்?. இந்த தமிழ் தேசியம் இந்த இருளர் மக்களுக்கு என்ன செய்தது? ஆனால் ஒன்றுமே செய்யாத தமிழ் சமுதாயத்துக்காக இருள் சூழ்ந்த சமூகத்தில் பிறந்து கடை கோடி கிராமத்தில் மனித நடமாட்டமே அற்ற ஒரு கிராமத்தில் பிறந்த தங்கை செங்கொடியின் தியாகம் தமிழ் சமூகத்தை உசுப்ப வில்லையா? .

                                                                 அந்த வீரமங்கையின் தியாகத்தை உலகுக்கு உயர்த்தி காட்ட வேண்டும் என்ற என்னம் ஏன் இந்த தமிழ் தேசிய தலைவர்களுக்கு வரவில்லை?

                                                                       இருளர் சமூகத்தில் பிறந்த காரணத்தினால் அந்த தியாகி செங்கொடியின் தியாகமும் இருட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் சாதி வெறி பிடித்த தமிழ் தேசிய உணர்வாளர்களே!
தியாகத்துக்கும் சாதி பார்க்காதிர்கள்!
தலைவர் திருமா சொன்னாரே!
தலைவர்களே! ஈழத் தமிழர்களுக்கு தலைமை ஏற்று போராடுங்கள்
நான் 100 அடி இடைவெளி விட்டு
உங்கள் பின்னால் வர தயார் என்று அப்பொழுது கூடவா உங்கள் மனதில் இரக்கம் பிறக்க வில்லை?

தீண்டாமையை ஒரு கையாலும்,
தமிழ் தேசியத்தை ஒரு கையாலும் தூக்கி பிடிக்கும்,
உங்களை கண்டிப்பாககரும்புலி முத்துக்குமார் தியாகி செங்கொடியின் . ஆண்மா மன்னிக்காது
- தியாகி முத்துக்குமாரையும் தங்கை செங்கொடியின் தியாகத்தையும் மனதில் ஏந்தி விடுதலைச் சிறுத்தைகளின் பயணம் தொடரும்: தடைகளை உடைத்து
மடிப்பாக்கம். ச. வெற்றிசெல்வன்.