Pages

Saturday, 3 September 2011

                                     தமிழ் தேசிய உணர்வாளர்களே!
                                தியாகத்திலும் சாதி பார்க்காதிர்கள்!

 


                                                         

                                                                                   அன்பு தோழர்களே வணக்கம்!
  ஈழத் தமிழர்கள் மீது போர் தொடுத்து மொத்த இனத்தையே கருவருத்த கொடுங்கோலன் ராஜபக்சேவையும் கோத்தபய ராஜபக்ஷேவையும் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் . இலங்கை நாட்டின் மீது பொருளாதார தடை விதித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவையும் கோத்தபய ராஜபக்சேவையும் கைது செய்ய வேண்டும் என்ற கருத்தும் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்தது.

                                                                   தமிழ்நாட்டிலும் அந்த கோரிகையை வலியுறுத்திபோராட்டம் நடத்தி வந்த வேலையில்-பேரறிவாளன், சாந்தன், முருகன்- இவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்ற பேரிடியை இந்திய அரசு தமிழக மக்கள் மீது திணித்தது.
                                                                  உடனே மூன்று அப்பாவி தமிழர்களை காக்க ஒட்டு மொத்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்- பட்டி தொட்டி எங்கும் அதன் வெப்பத்தை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்.தொல். திருமாவளவன் கொண்டு சென்றார் .
மாவட்ட தலை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் சிறுத்தைகள் உடன் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஜயா.ராமதாசுடன் தலைவர்.திருமாவளவன் சேர்ந்து 4 நாட்களிலேயே மறைமலை நகரில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டின் அறை கூவலாக 6ம் தேதி தமிழ்நாட்டின் 8 திசைகளில் இருந்தும் வேலூர் நோக்கி வாருங்கள். 8ம் தேதி வேலூர் சிறையை முற்றுகை இடுவோம். அதனால் எந்த வித நெருக்கடிகள் இன்னல்கள் சோதனைகள் வந்தாலும். 


நாம்அதை ஏற்றே ஆகவேண்டும் 3 தமிழர்களை காப்பாற்றியே தீர வேண்டும். இழந்த உயிர்கள் ஏராளம். இனி ஓரு உயிரையும் இழந்து விட கூடாது என்று தலைவர் திருமா சூளுரைத்தார் .அதை கேட்டு பாட்டாளி தோழர்களும் விடுதலைச் சிறுத்தைகளும். இன்னும் தங்களை வேகப்படுத்தி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கூட்டத்தில் இருந்த நேரத்தில் தான்? ஈரக் குலையே அறுந்து போகும் உணர்வை தந்தது ஒரு செய்தி! ஆம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர். தொல்.திருமாவளவன்அவர்கள் மீது உளமாற அன்பு செலுத்தும் அன்பு தோழி மகேஷ் ஜெசி அவர்கள் நடத்தி வந்த மக்கள் மன்றத்தை சேர்ந்த அன்பு தங்கை செங்கொடி 3 தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தமிழர்களுக்கு அறை கூவல் விடுத்துஅந்த வீர மங்கை தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டார். என்ற மரண செய்தி தான் அது.

ஆம் அங்கிருந்த அத்தனை தோழர்களும் துடித்து போனார்கள் தலைவர் .தொல்.திருமாவளவன் உடனே தங்கைக்கு வீர வணக்கம் செலுத்தி யாரும் இனி இப்படி செய்ய கூடாது என்று வேண்டுகோல் குடுத்தார் -- உடனே கூட்டத்தை முடித்து  காஞ்சிபுரம் சென்று GH மருத்துவமனை வாசலில்  மக்களுடன் கூட அமர்ந்து துக்கத்தை பகிர்ந்து கொண்டார்.
 

                                                  அடுத்து கரும்புலி செங்கொடிக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் .உடன் இருந்த தோழர்களிடம் நீங்கள் எல்லோரும் இரவு இங்கேயே இருந்து தேவையான உதவிகளை செய்து. தங்கை செங்கொடிக்கு இறுதி ஊர்வலம் நல்லபடியாக நடத்தவேண்டும் என்று சொல்லி- பொது செயலாளர் சிந்தனைசெல்வன் மற்றும் காஞ்சி அருள் டேவிட்- மற்ற தோழர்களிடம் சொல்லி சென்னை புறப்பட்டார்.
அதே போல அங்கே ம.தி.மு.க. சத்யா, பாலவாக்கம் சோமு மட்டும் தங்கி பணியாற்றினார்கள். மறுநாள் காலையில் காஞ்சியை நோக்கி சிறுத்தைகள் படை எடுத்தார்கள்
- வின் அதிர முழக்கம் எழுப்பி காஞ்சி மக்களை அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் விதமாக செய்தார்கள்.                                                                     பல தலைவர்கள் வந்தார்கள்.வீர வணக்கம் செய்தார்கள்
தங்கையின் வீர மரணம் தமிழ் நாட்டையே உசுப்பியது.
மாணவர்கள் , வழக்கறிஞர்கள் அனைவரும் போராடினார்கள். ஏன் தமிழக அரசையே அந்த போராட்டம் உசுப்பியது என்பது தான் உண்மை.
ஆம் முதல்வர் ஜெயலலிதா அவர்களே தீர்மானம் இயற்றக் கூடிய அளவுக்கு தங்கை செங்கொடியின் வீர மரணம் தமிழர்களை உசுப்பி விட்டது என்பது வரலாறு காணாத உண்மை .சட்டவல்லுனர்களின் விவாததால் நீதிமன்றமும் 8 வார காலத்துக்கு தடையும் விதித்து உள்ளது. தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்பது தங்கை செங்கொடிக்கும்
அந்த வீர மங்கை செய்த தியாகத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்பது மறுக்க முடியாத உண்மை!
                                                                 இருளில் பிறந்து இருளில் வாழ்ந்து தன்னை இருளில் புதைத்துக்கொண்டு உணர்வு அற்ற தமிழர்களுக்கு வெளிச்சம் மூட்டிய நம் தங்கை தியாகி செங்கொடி இன்று இருளை உடைத்து மின்னலாய் வெளிச்சமாய் இருக்கிறாள் .
                                                                   அப்பேர்ப்பட்ட கரும்புலி வீரமங்கை செங்கொடிக்கு இந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் தகுந்த மரியாதை செய்தார்களா?
அந்த தியாக நெருப்பை உலகுக்கு உயர்த்தி காட்டாத மர்மம் என்ன?
கரும்புலி முத்துகுமாரின் தியாகத்தை உலகத்திற்கு சொல்ல ஓடி ஓடி வேலை செய்த வியாபாரிகள் எங்கே?
அவரின் அஸ்தியை 4 திசைகளிலும் கரைக்கவேண்டும் என்று சொல்லி வேலை செய்த கண்ணியவான்கள் எங்கே ?
                                                      தமிழர் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்யும் தலைவர்கள் எங்கே ?
இங்கே எல்லோரும் சாதியாய் நிற்கிறார்கள் நான் மட்டுமே தமிழராய் நிற்கிறேன் என்று சொன்ன தலைவர் ஏன் செங்கொடியின் தியாக உடல் அடக்கத்திற்கு தன் தொண்டர்களுக்கு அழைப்பு விட வில்லை ! முயற்சிக்கவில்லை?
இருளில் பிறந்தவளின் புகழ் இருட்டிலேயே புதையட்டும் என்ற என்னமா ?
ஒடுக்க பட்டவனுக்கும் முடக்கபட்டவனுக்கும்!
தடுக்க பட்டவனுக்கும்! படைக்கபட்ட திருமாவளவன் இருக்கிறார்
நாம் ஏன் அதை செய்ய வேண்டும் என்ற என்னத்திநாலா???
தோழர்களே இங்கே தான் இந்த கேடு கெட்ட சாதி புத்தி தீண்டாமை எப்படி வெளிப்படுகிறது என்பதை பார்க்கிறோம் .

ஆம் தோழர்களே!
முள்ளிவாய்க்காலில் உச்சகட்ட போர் நடந்த போது உலக தமிழர்களே!
ஈழத் தமிழர்களை காப்பற்றுங்கள் என்று சொல்லி உலக மக்களுக்கு தன் கடிதம் மூலம் செய்தி அனுப்பி அதில் தேசிய தலைவர் பிரபாகரன் என் இறப்பை எப்படியும் தெரிந்து கொள்வார்- அண்ணன் திருமாவிற்கு உடனே என் இறப்பை தெரியப்படுத்துங்கள் என்று சொல்லி உயிர்தியாகம் செய்த மாவீரன் முத்துக்குமார் உடல் வட சென்னையில் இருந்த போது வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன் கடைகளை உடனே அடைத்து இறுதி ஊர்வலத்தில்அனைவரும் கலந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விட்டார்.
அணைத்து கடைகளும் அடைத்து அவர்களும் வீர வணக்கம் செலுத்தினார்கள். பல தமிழ் தேசிய உணர்வாளர்களும் தங்களின் அமைப்பு மூலம் அறிக்கை விட்டு பெரும் திரளான தோழர்களை அந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க செய்தனர்
                                                       மாவீரன் முத்துக்குமார் சவ ஊர்வலத்தில் ஆயிரக்கனக்கான தோழர்கள் பங்கெடுக்க செய்து அவர் செய்த மாபெரும் தியாகத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.
                                                           அவரின் அஸ்தியை தமிழ் நாட்டின் 4 திசைகளிலும் கரைக்க வேண்டும் என்று சொல்லி திசைக்கு ஒரு தலைவர்கள் அந்த அஸ்தியை எடுத்து ஊர்வலம் சென்றார்கள் மரியாதை செய்தார்கள் .
விடுதலைச் சிறுத்தைகள் அந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல கரும்புலி முத்துகுமாரின் தியாகத் திரு உருவ சிலையையும் அவர் இல்லத்திலேயே தலைவர் திருமாவளவன் அவர்கள் நிறுவினார்.
                                                                        அதை கூட திறக்க கூடாது என்று பல இன்னல்களை இடைஞ்சல்களை உருவாக்கினார்கள். ஆனால் தடைகளை உடைத்தே பழக்கப்பட்டு போன நம் தலைவர்
அத் தடைகளை வெறும் பூக்களை கொண்டே உடைத்து அந்த தியாக செம்மல் முத்துக்குமாருக்கு தோழர் சங்கத்தமிழன் மூலம் திருஉருவ சிலை நிறுவினார். நாம் அங்கே சாதி பார்க்கவில்லை அங்கே அந்த மாவீரனின் தியாகத்தை மட்டுமே பார்த்தோம். தியாகியின் பெயரை அந்த தியாகத்தை எங்கள் நெஞ்சிலே பச்சை குத்திக் கொண்டு போராடும் பச்சை தமிழர்களாகதான் சிறுத்தைகள் இருக்கிறார்கள் .

ஆனால் தங்கை செங்கொடிக்கு நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாநகரில் அனைத்து கடைக்ளும் திறந்து இருந்தன.

தமிழ் தேசிய உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

                                                        ஆனால் யாரும் தோழர்களை அணி திரட்டி வரவில்லை? தலைவர்கள் கூட தாங்கள் மட்டும் வந்து வீரவணக்கம் செய்து போனார்களே தவிர தொண்டர்கள் பங்கேற்க அறை கூவல் விடுக்கவில்லை. ஏன்? தோழர் மகேஷ் நடத்தும் மக்கள் மன்றம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர். தொல். திருமாவளவன் அவர்கலோடு இணைந்து பணியாற்றுகிறது என்ற காரணத்தினாலா? செங்கொடியின் உடல் மருத்துவமனையில் இருந்த போது சிறுத்தைகள் மட்டுமே அதிக அளவு இருந்த காரணத்திணாலா?

                                                                இல்லை இருட்டு சமூகமான இருளர் சமுதாயத்தில் பிறந்த காரணத்திணாலா? என்ன காரணம்?. இந்த தமிழ் தேசியம் இந்த இருளர் மக்களுக்கு என்ன செய்தது? ஆனால் ஒன்றுமே செய்யாத தமிழ் சமுதாயத்துக்காக இருள் சூழ்ந்த சமூகத்தில் பிறந்து கடை கோடி கிராமத்தில் மனித நடமாட்டமே அற்ற ஒரு கிராமத்தில் பிறந்த தங்கை செங்கொடியின் தியாகம் தமிழ் சமூகத்தை உசுப்ப வில்லையா? .

                                                                 அந்த வீரமங்கையின் தியாகத்தை உலகுக்கு உயர்த்தி காட்ட வேண்டும் என்ற என்னம் ஏன் இந்த தமிழ் தேசிய தலைவர்களுக்கு வரவில்லை?

                                                                       இருளர் சமூகத்தில் பிறந்த காரணத்தினால் அந்த தியாகி செங்கொடியின் தியாகமும் இருட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் சாதி வெறி பிடித்த தமிழ் தேசிய உணர்வாளர்களே!
தியாகத்துக்கும் சாதி பார்க்காதிர்கள்!
தலைவர் திருமா சொன்னாரே!
தலைவர்களே! ஈழத் தமிழர்களுக்கு தலைமை ஏற்று போராடுங்கள்
நான் 100 அடி இடைவெளி விட்டு
உங்கள் பின்னால் வர தயார் என்று அப்பொழுது கூடவா உங்கள் மனதில் இரக்கம் பிறக்க வில்லை?

தீண்டாமையை ஒரு கையாலும்,
தமிழ் தேசியத்தை ஒரு கையாலும் தூக்கி பிடிக்கும்,
உங்களை கண்டிப்பாககரும்புலி முத்துக்குமார் தியாகி செங்கொடியின் . ஆண்மா மன்னிக்காது
- தியாகி முத்துக்குமாரையும் தங்கை செங்கொடியின் தியாகத்தையும் மனதில் ஏந்தி விடுதலைச் சிறுத்தைகளின் பயணம் தொடரும்: தடைகளை உடைத்து
மடிப்பாக்கம். ச. வெற்றிசெல்வன்.

1 comment:

  1. செங்கொடியின் தியாகத்தைப் போற்ற, அவரது எண்ணத்தைச் செயலாக்க நாம் இருக்கிறோம்.வழிகாட்ட நம் தலைவர் இருக்கிறார். சந்தர்ப்பவாதிகள் முகமூடியைத் தெரிந்து கொள்ள இதனை இன்னுமொரு வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம்.முயல்வோம் வெல்வோம்.

    ReplyDelete