ஒற்றுமை ஏற்படுமா ???
அன்பு
தோழர்களே வணக்கம் கடந்த ஒரு வார காலமாக எனக்குள் ஒரு கேள்வி
எழும்பி கொண்டே இருக்கிறது ??? அது என்னவென்றால் தமிழ்தேசிய
களத்தில் அய்யா நெடுமாறன் அய்யா வைகோ அண்ணன் திருமாவளவன் கொளத்தூர்
மணி சீமான் இன்னும் பல தலைவர்கள் தொடர்ச்சியாக அவர் அவர் கட்சி
வலுவுக்கு ஏற்றார் போல போராடி கொண்டே இருக்கிறார்கள்கள்
தலைவர்களுக்குள் ஆயிரம் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அதையும்
தாண்டி விமர்சித்து கொண்டே அல்லது குற்றசாட்டுகளை சுமந்து
கொண்டோ தங்களின் ஈழ போராட்டத்தை தமிழ் நாட்டில் நடத்தி கொண்டே
தான் இருக்கிறார்கள் ஆனாலும் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது
எட்டாக்கனியாகவே இருக்கிறது ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம்
சொல்லியே அல்லது யார் சிறந்தவர் யார் பெரியவர் அல்லது சாதிய
போக்கு இப்படி பல வகையில் இவர்களின் ஒற்றுமை சிதறி கிடக்கிறது ..
இது ஒரு புறம இருக்கட்டும் மேலே சொன்ன தலைவர்கள் நீண்ட காலம்
ஈழமக்களின் துயர் துடைக்க போராடி வருகிறார்கள் ஆனால் இங்கே
பேசுகிற எந்த பேச்சுகளுக்கும் அல்லது முடிவுகளுக்கும் இந்திய அரசோ
தமிழக அரசோ இலங்கை அரசோ செவி சாய்ப்பது இல்லை??? எல்லா
போராட்டங்களாலும் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை என்பது
உண்மை ... ஆனாலும் போராடி கொண்டு இருக்கிறோம் >>>. ஆனால்
ஆட்சியில் இல்லாத போது கலைஜர் அவர்கள் அவரையே சிக்கல் இல்லாமல்
பாதுகாத்து கொள்வது கடினமாக உள்ள சூழ்நிலையிலும் இப்போது அவர்
ஈழமே தீர்வு அதை அடையாமல் ஓயமாட்டேன் என்று சொல்லி வாய் மூடும்
நேரத்தில் அதற்குள்ளாக இலங்கை ராஜபக்ஷே பசில்ரஜபகஷே கோபம
அடைகிறார்கள் பதில் தருகிறார்கள் தமிழ் நாட்டில் ஈழம் அமைத்து
கொள்ளுங்கள் என்று பதில் வருகிறது >>> உண்மையோ பொய்யோ
கலைஜரின் வார்த்தை சிங்களவனின் மனதை கோபம் மூட்ட செய்கிறது
இப்போதும் மேலே சொன்ன தலைவர்கள் அதையும் தாண்டி தினம் தினம்
ஏதாவது ஒரு போராட்டம் நடத்தி கொண்டே இருக்கிறார்கள் ஆனாலும் பலன்
????// ஆக நமது போராட்டங்களால் ஏதாவது ஒரு பலன் ஈழ மக்களுக்கு
ஏற்படவேண்டும் என்று விரும் பினால் இவர்களின் ஒற்றுமை மிக மிக அவசியம்
இல்லை என்றால் காலம் காலமாய் போராட்டம் நடத்துவோம் ஆர்பாட்டம்
நடத்துவோம் மறியல் செய்வோம் சக்தியை பணத்தை இழப்போம் >>>
ஆனால் அதனால் வரும் பலன் கண்டிப்பாய் நம்மால் பெற இயலாது ???//
ஒருநாள் கூத்தில் ஜெயா பலனை அனுபவிப்பது போல ஒருநாள் கூட்டத்தில்
ஆர்பாட்டத்தில் அல்லது மறியலில் கலைஜரோ அல்லது ஜெயலலிதாவோ தான்
மறுபடியும் பலனை அறுவடை செய்வார்கள் அதனால் ஈழ மக்களுக்கு எந்த
பயனும் ஏற்படாது என்பதே என் கருத்து ஆக ஒற்றுமை ஒற்றுமை
ஒற்றுமை ஈழமே தீர்வு என்று போராடுபவர்களின் ஒற்றுமையே ஈழ
மக்க்களுக்கு நன்மை பயக்கும் தலைவர்கள் சிந்திப்பார்களா ???? சாதி
கடந்து ??/ மதம் கடந்து ??? மொழி கடந்து ??? ஈழமே தீர்வு என்று
போராட்டத்தில் கை கோர்ப்பார்கலா ??????/ஈழம் வெல்லும் அதை காலம்
சொல்லும்
No comments:
Post a Comment