Pages

Thursday, 3 May 2012

 சென்னையில் உள்ள இலங்கை 

தூதரகம்முற்றுகை: திருமாவளவன் கைது 


 

இலங்கையில் பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். போராட்டம் காரணமாக தூதரகம் முன்பு தடுப்பு வேலிகள் போடப்பட்டிருந்தது. அதை மீறி விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகையிட சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அப்போது ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். இலங்கை அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களையும் எழுப்பினர். 
முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர். கட்சி தலைவர் திருமாவளவன், மாநில பொருளாளர் முகமது யூசுப், கொள்கை பரப்பு துணை செயலாளர் சைதை எஸ்.எஸ். பாலாஜி, ஷாநவாஸ், வன்னியரசு, மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இரா. செல்லம், விடுதலை செல்வன், வக்கீல்கள் பாரிவேந்தன், வேல்முருகன், பழனிமுத்து, தகட்டுர் தமிழ்செல்வன், இளங்கோ உள்பட 500 பேர் கைதானார்கள். அவர்கள் மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். 

No comments:

Post a Comment