தமிழ்த் தேசியத்தை அம்பெத்கரியத்தோடு எப்படி இணைக்க முடியும் ? -தொல்.திருமா
தமிழ்த் தேசியத்தை அம்பெத்கரியத்தோடு எப்படி இணைக்க முடியும் ? என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லுகிறேன் ,புரட்சியாளர் அம்பேத்கர் எந்த தேசிய அரசியலுக்கும் எதிரானவர் இல்லை.தமிழைப்பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தம்முடைய எழுத்துக்களிலே குறிப்பிட்டிருகிறார் .இந்த நாடு நாகர்கள் நாடு நாகர்கள் தான் திராவிடர்கள் திராவிடர்கள் என்பவர் வேறுயாருமில்லை தமிழர்கள் தான்! என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.
ஆக ஒருவன் மராட்டி பேசினாலும் ,தெலுங்கு பேசினாலும் நாகாபேசினாலும் அவனது மூலம் தமிழ் அவனின் ஆதிமூலம் தமிழ் ஆகவே இந்த உணர்வை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களே பெற்றிருக்கிறார் என்பதை அம்பேத்கர்வாதிகள் உணரவேண்டும் .
தமிழ்தேசியம் மட்டுமே இந்திய தேசியத்திற்கு எதிரான அரசியல் இந்திய தேசியம் என்பது இங்கே எப்படி இருக்கிறது என்றால் ,இந்துத்துவமாக இருக்கிறது
இந்துத்துவம் இங்கே எப்படி இருக்கிறது என்றால் இந்திய அரசாக இருக்கிறது .இந்திய அரசாக இருக்கிற இந்த அரசமைப்பு எப்படி இருக்கிறது என்றால் இந்துத்துவ கட்டமைப்பை பாதுகாக்கக் கூடியதாக இருக்கிறது .ஆக இந்துத்துவ கட்டமைப்பை எதிர்க்கவேண்டும் என்று எண்ணுகிறவன் தமிழ்தேசியம் என்கிற ஆயுதத்தை எடுப்பதைத்தவிர வேறு வழியில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் உணருகிறது .தமிழ்தேசியம் என்பதோ ,தமிழ்பெயர் ஏற்பு என்பதோ வெறும் மொழி உணர்சியல்ல .இது வரலாற்றை மீட்டெடுக்கக் கூடிய ஒரு பண்பாட்டுக் கலகம்,பண்பாட்டு அடையாளத்திற்கான ஒரு அறப்போர்.ஆகவே இந்த கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதே இந்த நேரத்தில் நான் தெளிவுபடுத்தக் கடமைபட்டிருகிறேன்.
-தொல்.திருமாவளவன்
No comments:
Post a Comment