Pages

Wednesday 27 June 2012




போராளி தலைவரின் பொன்விழா நோக்கி ....

மடிப்பாக்கம் ச . வெற்றிச்செல்வன்  

மற்றும்

இணையதள சிறுத்தைகள் , விடுதலை சிறுத்தைகள் கட்சி

தலைமையில் 500 கிராம்  பொற்காசுகள் வழங்கும் விழாவை முன்னிட்டு

Thursday 21 June 2012

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

                                                              ஒவ்வொரு முன்னணி பொறுப்பாளர்கள் எழுச்சித் தமிழரின் பொன்விழா தொடர்பாகவும் ,கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் தொடர்பாகவும் ,டெசோ தொடர்பாகவும் ,கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவது தொடர்பாகவும் தங்களின் கருத்துகளை எழுச்சித் தமிழர் அவர்களிடம் முன்வைத்தனர் ,எல்லோரும் தங்களின் கருத்துகளை தெரிவித்தபின் எழுச்சித்தமிழர் அவரது  நிறைவுரையை சுமார் 1.30 மணி நேரம் நிகழ்த்தினார்.இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஒரு மனதாக ஒர்சில முக்கிய முடிவுகளை எடுத்தார்கள் .

* தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைமை நிலையச்செயலாளர் வனச்செழியன் மீது தொடர்ந்து புகார் வருவதால் அவரை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டார் .
* புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பை தலைமை நிலைய பொறுப்பாளர்களே ஒரு குழுவாக அமைந்து ஆலோசணை வழங்குவதின் அடிப்படையில், அதனை பரிசீலனை செய்து தலைவரே புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என முடிவு எடுக்கப்பட்டது
* டெசோ அமைப்போடு விடுதலைச்சிறுத்தைகள் தொடந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்கும் என முடிவு எடுக்கப்பட்டது .
*விரைவில் எல்லோருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றும்
* எழுச்சித்தமிழரின் பொன் விழா ஆண்டை ஆகத்து 17மட்டும் சிறப்பாக கொண்டாடாமல் ,இந்த ஆண்டு டிசம்பர் முழுவதும்
கொண்டாடவேண்டும் என்றும் தலைவரின் கருத்துகளை பரப்பவேண்டும்.என்றும் கட்சி தீர்மானிக்கப்பட்டது.

Thursday 7 June 2012

சாதி ஒழிப்பிற்கு முதன்மையான கடமை

                           




                                                                 இந்த மண்ணில் ஆன்மீகத்திலிருந்து அரசியல் வரை அனைத்துத் தளங்களிலும் சாதியத்தின் ஆளுமை மேலோங்கி இருக்கிறது.
மண்ணை இழந்தாலும் மானத்தை இழந்தாலும் சாதியை இழக்க முடியாது என்னும் பித்துக்குளித்தனம் இங்கே தலைவிரித்தாடுகிறது. குடியிருக்கும் இடம் , குளிக்கும் குளம், கும்பிட்டு வழிபடும் கோவில், சுடுகாடு போன்ற மனித வாழ்வின் அடிப்படைத்தளங்கள்  ஒவ்வொன்றும் சாதியைத் தவிர்த்து அமைந்திடவியலாது
என்னும் வகையில், இங்கே சாதிய தருமத்தின் ஆட்சிகொடி கட்டிப் பறக்கிறது சாதியத்தன்மையின்றி தமிழ்ச்  சங்கங்களைக்கூட  கட்ட முடியாத நிலைதான் நிலவுகிறது. திரைப்பட ரசிகர்சங்கமாக இருந்தாலும், உழைக்கும் தொழிலாளர் சங்கமாக இருந்தாலும், அரசு ஊழியர் சங்கமாக இருந்தாலும் அனைத்திலுமே சாதியத்தின் வேர்களே விரவிப் பரவிக்கிடக்கின்றன .



இந்நிலையில், அரசியல் கட்சிகள் மட்டும் அதற்கு எங்ஙனம் விதிவிலக்காக அமையும்? அனைவருக்கும் பொதுவான சங்கம் , இயக்கம், கட்சியென பெயர் சூட்டிக் கொண்டாலும் அவற்றின் உயிர் நாடியாக சாதியே வெளிப்படையாகவோ, உட்கிடையாகவோ இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் சாதிய முரண்பாடுகளை நம்பியே உருவாகின்றன:
உயிர்  வாழ்கின்றன. அத்தகைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும்  சட்டமன்றத்தில் எவ்வாறு சாதியை ஒழிக்க சட்டம் கொண்டு வருவார்கள்? அரசியல் கட்சிகளுக்கு சாதியும் மதமும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கருவிகளாகவே பயன்படுகின்றன. இவிரன்டையும் கைவிட்டு விட்டு இன்றைய அரசியல் கட்சிகளால் இயங்கவே முடியாது என்பதை நாம் உணரவேண்டும். சாதியை ஒழிக்கவும் சாதியின் பெயரால் விளையும் கேடுகளையும் ஒழிக்கவும் காலங்காலமாக சாதியின்  அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட சேரிவாழ் மக்களின் எழுச்சியால் மட்டுமே முடியும்.மாறாக, சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும், பெருமை கொள்ளும் கும்பலின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளவரை சாதியை ஒழிக்க சட்டங்கள் வந்தாலும் அவற்றால் ஒருபோதும் பயன் விளையாது.

சட்டம் போட்டு சாதியை ஒழிக்க முடியாது, சாதிக்கட்சிகளை தடுக்க முடியாது. சாதி - மத வன்கொடுமைகளை நிறுத்தமுடியாது என்பதை கடந்தகால வரலாற்றின் மூலம் காண முடிகிறது. நிலைகுலையாதநெஞ்சுரத்தொடும் பின்வாங்காத போர்க்குணத்தோடும் சமரசமின்றி நடத்தப்படும் தொடர்ச்சியான வெகுமக்களின் போராட்டங்களின் மூலமே சாதி ஒழிப்பை முன்னெடுக்க முடியும். நிறைவேற்ற முடியும்.  ஆகவே, சாதியச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இன்றைய  சாதி ஆதிக்கத்தை உடைக்க  புரட்சிக்கான நெருப்பு புகைந்து கொண்டிருக்கும் சேரிகளை உசுப்ப வேண்டியதே முதன்மையான கடமையாகும். 


                                                                                -தலைவர் தொல். திருமாவளவன்.

Tuesday 5 June 2012

                                        பொற்காசு வழங்கும் விழா




வருகின்ற          11-06-2012  திங்கள் கிழமை மாலை 6 - மணிக்கு
 சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் போராளி தலைவருக்கு பொற்காசுகள் வழங்கும் விழா

கலையரங்கம்

கொடையரங்கம்


கருத்தரங்கம்


நடை பெறுகிறது சிறப்பு விருந்தினர்கள்

அய்யா நல்லகண்ணு

கவிஞர் காசி ஆனந்தன்


கலந்து கொள்கிறார்கள் 

                                                     ஏற்புரை


போராளி தலைவர் தொல். திருமாவளவன்


Friday 1 June 2012



போராளி தலைவருக்கு பொன் விழா ஆண்டு -

வருகின்ற ஆகத்து 17 அன்று எழுச்சி தமிழர் 50 வது பிறந்தநாளை 

முன்னிட்டு தலைமை நிர்வாகிகள் தலைமையில் வருகின்ற 11/06/2012.

அன்று மாலை 5 மணிக்கு

சர்ப்பிட்டி தியாகராயர் அரங்கில்

தலைவர் ஏற்புரையுடன்-

-- கவியரங்கம் -

-- கொடையரங்கம்-

-- இசையரங்கம்-


நடைபெற உள்ளது.

தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒடுக்கப்பட்ட தமிழனுக்காய் தன் 

வாழ்வையே அர்ப்பணித்த உத்தம போராளி தலைவனுக்கு வாழ்த்துக்கள் 

சொல்ல அணி திரள்வோம்

தலைவனின் கரத்தை வலுப் படுத்துவோம்....
 
எழுச்சி தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்
இந்திய பொதுவுடைமைக் கட்சி தலைவர் அய்யா நல்லகண்ணு 
அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வரச் சொன்னதின் பேரில்.
 நேற்று மாலை- அய்யா நல்லகண்ணு 
அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து மரியாதை செய்தோம் உடன் தோழர் 

மகேந்திரன், வன்னிஅரசு ,, செந்தில் இருந்தனர்.