Pages

Thursday, 21 June 2012

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

                                                              ஒவ்வொரு முன்னணி பொறுப்பாளர்கள் எழுச்சித் தமிழரின் பொன்விழா தொடர்பாகவும் ,கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் தொடர்பாகவும் ,டெசோ தொடர்பாகவும் ,கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவது தொடர்பாகவும் தங்களின் கருத்துகளை எழுச்சித் தமிழர் அவர்களிடம் முன்வைத்தனர் ,எல்லோரும் தங்களின் கருத்துகளை தெரிவித்தபின் எழுச்சித்தமிழர் அவரது  நிறைவுரையை சுமார் 1.30 மணி நேரம் நிகழ்த்தினார்.இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஒரு மனதாக ஒர்சில முக்கிய முடிவுகளை எடுத்தார்கள் .

* தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைமை நிலையச்செயலாளர் வனச்செழியன் மீது தொடர்ந்து புகார் வருவதால் அவரை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டார் .
* புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பை தலைமை நிலைய பொறுப்பாளர்களே ஒரு குழுவாக அமைந்து ஆலோசணை வழங்குவதின் அடிப்படையில், அதனை பரிசீலனை செய்து தலைவரே புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என முடிவு எடுக்கப்பட்டது
* டெசோ அமைப்போடு விடுதலைச்சிறுத்தைகள் தொடந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்கும் என முடிவு எடுக்கப்பட்டது .
*விரைவில் எல்லோருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றும்
* எழுச்சித்தமிழரின் பொன் விழா ஆண்டை ஆகத்து 17மட்டும் சிறப்பாக கொண்டாடாமல் ,இந்த ஆண்டு டிசம்பர் முழுவதும்
கொண்டாடவேண்டும் என்றும் தலைவரின் கருத்துகளை பரப்பவேண்டும்.என்றும் கட்சி தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment