Pages

Wednesday 12 March 2014



திருவள்ளூர் தொகுதி விசிக வேட்பாளர் தோழர்.ரவிக்குமார் அவர்கள்

இந்த தொகுதியில் அண்ணன் பூவை மூர்த்தி  அண்ணன்  திருமாவளவன் இவர்களோடு  சமுதாய கள பணி ஆற்றி உள்ளார், நம் சமுதாய மக்களுக்கு ஒரு வாய்ப்பு ,நம் வீட்டு பிள்ளையான அண்ணன் திருமாவளவன் அவர்களின் கருத்தையும் கரத்தையும் வலுபடுத்த இந்த மக்களுக்கு அரணாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எழுத்தாளர் துரை ரவிக்குமார் வெற்றிக்காக பாடுபட உறுதி எடுப்போம்

இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே ....
ரவிக்குமார்( 1961 - )
நாகை மாவட்டம்,சீர்காழி வட்டத்திலுள்ள மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் பிறந்த ரவிக்குமார் எம்.ஏ., பி.எல்..,பட்டங்களைப் பெற்றவர். தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ' மன்னன் நந்தனின் மறைக்கப்பட்ட வரலாறு' என்ற தலைப்பில் பி.எச்.டி ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

விமர்சனம், கவிதை , மொழிபெயர்ப்பு என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். சுமார் நாற்பது நூல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Venomous Touch ( Samya, Kolaktta ,2009) என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் நிறுவனத்துக்காக தமிழ் தலித் எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.

நிறப்பிரிகை, தலித்,போதி ஆகிய சிற்றிதழ்களைத் துவக்கி நடத்திய இவர் தற்போது' மணற்கேணி' என்னும் இருமாத ஆய்விதழை நடத்திவருகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், பயனீர்,செமினார்,ஹிமால் முதலான ஆங்கில இதழ்களிலும்; தினமணி, இந்தியா டுடே,ஜுனியர் விகடன்முதலான தமிழ் ஏடுகளிலும் முன்னூறுக்கும் மேற்பட்டக் கட்டுரைகளை எழுதிஇருக்கிறார் .

பி.பி.சி.தமிழோசை வானொலியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தரத் தமிழக மடலை வழங்கியவர் .

சுமார் இருபது ஆண்டு காலம் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டவர். மக்கள் சிவில் உரிமைக்கழகம் ( பி யு சி எல் ) அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளுக்குத் தலைவராக இருந்தவர். தமிழ்நாட்டில் மரண தண்டனை ஒழிப்புக்கான பிரச்சாரம் இவரால்தான் 1998இல் முன்னெடுக்கப்பட்டது .

2006 - 2011 இல் தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர். அந்த காலக்கட்டத்தில் , நரிக்குறவர் நலவாரியம், புதிரை வண்ணார் நலவாரியம் , வீட்டுப் பணியாளர் நலவாரியம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம், ஓமியோபதி மருத்துவர்கள் நலவாரியம் , அரவாணிகள் நலவாரியம் என ஐந்து நலவாரியங்கள் உருவாக்கப்படுவதற்கும், குடிசைவீடுகளை மாற்றி இருபத்தொரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான திட்டம் அறிவிக்கப்படுவதற்கும் , தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் பணக்கொடை உள்ளிட்ட வசதிகள் மேம்படுவதற்கும் காரணமாக இருந்தவர்.

2010 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதினைப் பெற்றவர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண் பேராயக் குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

Saturday 8 March 2014







அன்பு தோழர்களே !! தம்பிகளே !!
                                    வணக்கம் .. கடந்த இரண்டுமூன்று நாட்களாக நெருக்கடியான சூழல் விடுதலை சிறுத்தை கட்சியின் கடைசி நிலை தொண்டர்கள் வரை தமக்கான அங்கிகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை கோபத்தை சொல்லிலும் செயலிலும் காட்டி இருந்தார்கள்.....
                     அடங்க மறு!!

                      அத்து மீறு!!

என்று கற்றுத்தந்த தலைவருக்கு எதிராகவே அடங்க மறுத்த தம்பிகளின் உணர்வுகளையும் பார்த்தோம் ..
ஆனாலும் நம்முடைய உணர்வுகளை !! கோபத்தை !! வருத்தங்களை !! சிறுங்கல்களை !! நம்மோடு இணக்கமாக இருக்கின்ற திராவிட முற்ப்போக்கு கழகம் கண்டு பரிசிலித்து இன்று ஒரு தொகுதியை திருவள்ளூர் நமக்கு ஒதுக்கி தந்து இந்த சமுகத்திற்கு அரணாக இருக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆரம்பித்து.
அதன் வளர்ச்சிக்காக
 அதை தமிழக அரசியல் மேல்மட்டத்தை நிறுவதற்காக.
அரசியல் அங்கிகாரம் பெறுவதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக .. சாதி, மதங்களை ஒழிப்பதற்காக சாதாரண மனிதனும் தலைவனாக மாறுவதற்காக அடிமட்ட தொண்டனுக்கும் ஜெனநாயகத்தை கற்று தருவதற்காக,
தன் வாழ்க்கையையே தொலைத்து ..
 தனி மனிதனாக தன் சுகதுக்கங்களை மறந்து, உற்றார் உறவினர்களை மறந்து, தொண்டனுக்கு தொண்டனாக தோழனுக்கு தோழனாக

 தம்பிகளுக்கு அண்ணனாக ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைவனாக ...

கிடைக்கிற இடத்திலேயே தூங்கி
இந்த சமுகத்திற்காக ஒவ்வொரு மணி நேரத்தையும் செலவழித்துக் கொண்டு இருக்கும் எழுச்சி தமிழர் . அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களால்  இன்றைக்கு ஒட்டுமொத்த விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது ....

அன்பு தோழர்களே !! 
                    கடந்த இரண்டுமூன்று நாட்களாக நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் முகநூலிலும் தாங்கள் என்ன செய்ய கூடாதோ அதை செய்திர்கள் : எதை செய்ய வேண்டுமோ அதை மறந்தீர்கள் .....
                       தோழர்களே !!
              நம் அனைவருக்கும் ஒன்று பிடித்துவிட்டால் அதை வான் அளவுக்கு உயர்த்தி பேசிவிடுவதும் ... அதை பற்றியே பேசி கொண்டு இருப்பதும் .. அவர்களைப்பற்றி சொல்லி கொண்டே இருப்பதும் வழக்கமாய் இருக்கிறது ...
ஆனால் பிடிக்கவில்லை என்று சொன்னால் மாறுபட்ட சிந்தனை உங்களுக்கு தோன்றினால் எப்பேர்பட்ட மாமனிதர்களையும் அவர்களுடைய கடந்தகால வரலாற்றை மறந்து .. அவர்கள் செய்த தியாகங்களை மறந்து அவர்கள் செய்த நெடிய சுகதுக்கங்களை நினைவு கூறாமல் தங்களுக்கு கிடைத்த செய்திகளின் அடிப்படையில் ... கருத்தின் அடிப்படையில் அவர்களை மரியாதை குறைவாக விமர்சிப்பதும் ... கடை நிலை மனிதனைக்கூட விமர்சிக்க கூடாத வார்த்தைகளை விமர்சிப்பது ...
மனித நேயம் அல்ல!!
மானுடத்தை நேசிக்கும் மனிதனின் பண்பும் அல்ல !!
தனக்கு லாபமான காரியம் ஏற்பட்டால் கைதட்டுவதும் ..
லாபம் இல்லாத காரியங்கள் என்ற உடன் காரிதுப்புவதும் நன்றியுல்ல மனிதன் செய்யும்காரியம்  அல்ல..!!
 
                        என் அன்பு தம்பிகளே !!
                                              யாரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ இந்த செய்தியை நான் சொல்லவில்லை.. இந்த கட்சிக்காக .. இந்த சமூகத்துக்காக .. இந்த கட்சியில் பணியாற்றுக்கின்ற முன் அணி தோழர்களுக்காக கடைநிலை தொண்டனுக்காக பாபாசாகேப் அம்பேத்கர் அடுத்து அண்ணன்.தொல்.திருமா அவர்கள் மட்டுமே அரணாக இருக்கிறார்..அவரை பாதுகாப்பது மட்டுமே ..
உயர்த்தி பிடிப்பது மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு மனதில் நிலை நிறுத்துவது மட்டுமே கொண்ட கொள்கையின் உறுதியும் லட்சியத் தலைவரை நேசிக்கும் ஒருஒரு விடுதலை சிறுத்தைகளின் கடமை ஆகும். ஆனால் நாம் சில நேரங்களில் சிறு குழந்தையை போல் மாறிவிடுகிறோம் ..
தலைமையின் கட்டளைகளை மீறுகிறோம்.

அடங்கமறுக்கிறோம் !! அத்து மீறுகிறோம் !!

ஆனால் அதுவும் ஒரு விதப்பயணை நமக்கு தந்தே இருக்கிறது .. தம்பிகளின் கோபம் தமிழ்நாட்டு அரசியலை மாற்றி இருக்கிறது .
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது . கொள்கை குன்றுகளாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளை நாம் ஏன் அழைக்க கூடாது என்று சிந்திக்க வைத்திறுக்கிறது ..
இரண்டுமூன்று நாட்களாக சிறுத்தைகளின் கோபம் தமிழ்நாட்டு அரசியலில் ஏன் இந்திய அரசியலில் கூட உற்று கவனிக்க வைத்திறுக்கிறது ..
சிறுத்தைகளின் பலத்தை அறியவைத்திருக்கிறது . அதே நேரத்தில் சிறுத்தைகளின் பலவினத்தையும் உணரவைத்திறுக்கிறது
அன்பு தம்பிகளே !! கடைசி நிலை தொண்டனாக இரண்டாம் கட்ட தலைவர்களாக  இருக்கும் நமக்கே இப்பேற்பட்ட வருத்தங்களும் மனஉலச்சலும் இருக்கிறது என்று சொன்னால் . எங்கோ ஒரு மூளையில் தென் தமிழ் நாட்டில் ஒரு இருபது பேரோடு கட்சியை ஆரம்பித்து இன்று தமிழகம் முழுவதும் கட்சிகிளைகளை கட்டி கட்சியை விருவிபடுத்தி . தி.மு.க,, அதிமுக,, காங்கிரஸ் ,, கம்யூனிஸ்ட் ,, விடுதலை சிறுத்தைகள்  என்ற தவிர்கமுடியாத சக்தியாக இன்றைக்கு வலுப்பட வைத்திருக்கும் அண்ணன் திருமாவளவன் எப்பேர்பட்ட மனஉலச்சலை சந்திருப்பார் என்பதை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும் ..

அரசியல் சக்தியாக மாறவேண்டும் என்று தன்வாழ்கையையே தொலைத்து தியாக தீபமாய் சிறுத்தைகளின் தலைவனாய் நமக்கெல்லாம் அண்ணனாய் ஒடுக்கப்பட்ட மக்களின் குடும்ப தலைவனாய் நிற்க்கும் அண்ணன் தொல்.திருமாவளவனை உயர்த்தி பிடித்து நிற்பது மட்டுமே நாம்  செய்யும் நன்றிகடன். அவசர கோளத்தில் அள்ளி தெளிக்காமல் அற்பனிப்புகளை மதிக்க கற்று கொள்ளவேண்டும்.

எனது அருமை தம்பிகளே !!!!!
கசப்புகளை மறப்போம் ..
வருத்தங்களை துடைப்போம் !!
நல்ல எண்ணங்களை உருவாக்குவோம் .. நாம் அனைவரும் இந்த அரசியலில் என்ன லாபம் பெருகிரோமோ இல்லையோ ஆனால் நாம் ஒன்றை மட்டும் நினைவு கூற வேண்டும். நமது தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன்  எந்த முடிவு எடுத்தாலும் இந்த கட்சியின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையை முதலில் வைக்கவேண்டும் ..

எப்பேர்பட்ட பிரச்சனைகள் வந்தாலும்,,
எப்பேர்பட்ட சூதுவாது வந்தாலும்,,
எப்பேர்பட்ட பொய்யான செய்திகள் வந்தாலும் ,,
இந்த சமுகம் நலம் பெற வேண்டும் ,,
வலம் பெற வேண்டும் ஆளுமை பெற வேண்டும்
அதிகாரம் பெற வேண்டும்
உருவாக்க தயராகிவா ....
40  தொகுதியும் நமதே என்று களமாட வா ..
மதவாத சக்திகளை தடுக்க முற்போக்கு சக்திகளை அணிதிரட்டி வா ..
உன் விரல் நுனியில் அதிகாரம் வென்று எடுக்க வா..
சிதம்பரத்திலும் ,, திருவள்ளுர் தொகுதியிலும்  உன் வெற்றியை உறிதாக்கு மற்ற தொகுதிகளில் தோழமை கட்சியின் வெற்றிக்கு பாடுபடு
நாளை நமதே அண்ணன் எழுச்சி.தமிழர்.தொல்.திருமாவளவன் வழியில் நடப்போம் அவருடைய கருத்தையும் கரத்தையும் வலுப்படுத்துவோம் ..
அறிவார்ந்த தம்பிகளே ஆற்றல் மிக்க உறவுகளே அண்ணன் திருமாவளவன் முகம் மட்டுமே நமக்கு அரண் என்பதை மரவாதிர்கள் . அதை சிதையாமல் பாதுகாப்போம் சிதைந்து விடாமல் உயர்த்தி பிடிப்போம்...................
  
என்றும் அன்புடன் ,,

மடிப்பாக்கம்.ச.வெற்றிசெல்வன்      

Sunday 2 March 2014





அன்பு தோழர்களே!!
என் அன்பு தம்பிகளே !!
வணக்கம் , நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களோடு பேச அல்லது சேர !! என் மகிழ்ச்சி வருத்தம் எதையோ சொல்ல, இந்த முகநூலின் வழியாக வருகிறேன். இன்று என்னுடைய பிறந்த நாள் ஆம் நான் இந்த பூமியில் பிறந்து 45 ஆண்டுகள் முடிந்து 46 வது வயது தொடங்கி இருக்கிறது,
 ஆம் தோழர்களே !! இவ்வளவு வருடங்கள் போனது தெரியவில்லை, இவ்வளவு வயது ஆகிவிட்டது என்றும் உணர்ந்த தருணமும் இல்லை ஆம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை இந்த நிலையிலையே என் மனம் இருந்தது, இதோ இந்த ஆண்டு என் பிறந்த நாள் மிக மிக வெறுமையாக சூன்யமாக வயதான நபரின் உண்மையான மனநிலையில் இந்த நாள் எனக்கு இருக்கிறது என்னை சுற்றி அண்ணன் அண்ணி மனைவி மகன்கள் மகள்கள் என்னோடு சந்தோசமோ துக்கமோ சேர்ந்து பயணப்படும் தம்பிகள் உறவுகள் அனைவரும் இருக்கிறார்கள்.. அவர்கள் உற்சாகமாக என்னை வாழ்த்தினார்கள் அன்பு காட்டினார்கள் நன்றி சொன்னார்கள். ஆனாலும் என் மனம் மகிழ்ச்சி அற்று அந்த இருளில் தம்பிகளுக்கு நடுவில் என் வாசலில் மாடியில் என் கண்கள் தேடுகிறது, எங்காவது ஒளிந்து கொண்டு என்னை பார்கிறார்களா என்று இல்லை இருள் மட்டுமே இருந்தது. எல்லோரும் இருந்தார்கள் இத்தனை ஆண்டுகள் என்னை வளர்த்து ஆளாக்கி சீராட்டி ஆகஸ்ட் மாதம் வரை கூட என் குழந்தை எங்கே என் குழைந்தை எங்கே என்று தேடி அன்பு பாசம் நேசம் இறக்கம் வீரம் ஊட்டி வளர்த்த என் வெளிச்சம் பெரும் தெய்வம் என் தேவதை என்னை பெற்று வளர்த்த என் அன்பு தாய் நான் தொலைத்து வெறுமையாக நிற்கிறேன் கொட்டி கொட்டி கொடுத்தாலும் வாங்க முடியாத அந்த தூய்மையான அன்பை தொலைத்து அனாதையாக நிற்கிறேன் .. தோழர்களே !! என் அம்மா இறக்கும் தருவாயிலும் என்னை குழைந்தை என்றே அழைப்பார்கள் யாரவது அம்மாவிடம் என் வயதை கேட்டால் அம்மா சொல்வார்கள் குழைந்தைக்கு 28 வயசு தான் என்று சொல்லி அதிர்ச்சி அளிப்பார்கள் தன வாழ்கையின் கடைசி மூச்சு நிற்கும் வரை என்னை ஒரு குழந்தையாகவே கருதி பேசுவார்கள் கொஞ்சுவார்கள்,,,, அம்மா மருத்துவமனையில் கடைசி நாட்கள் இருக்கும் போது நான் உள்ளே சென்றேன் ... அப்போது அம்மா கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள் நான் போனதும் வேலைக்கு போனியா என்றார்கள் ஆமாம் அம்மா என்றேன் காசு கிடைச்சுதா என்றார்கள் ஆமாம் என்றேன் சும்மா சொல்லாத காசு இல்லாம கஷ்டபடுரியா இந்தா இந்த கம்மலை எடுத்துட்டு போ அடகு வச்சு வியாபாரம் பண்ணி காசு சம்பாதிச்சு சந்தோசமா இருன்னு சொன்னாங்க.. எனக்கு அந்த தருணத்தில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை வேணாம் கழட்டாதமா என்று சொலலி பணம் இருக்கு என்றேன்.. நம்பவில்லை உடனே பாக்கெட்ல இருந்து பத்தாயிரம் ரூபாய் கட்டு ஒன்றை அவர்களிடம் கொடுதேன் அம்மாவுக்கு முகமெல்லாம் சிரிப்பு எல்லோருக்கும் வாரி வாரி குடுத்துடுவ உனக்கு கஷ்டம்னா யாரும் தர மாட்டாங்க நான் வச்சுகுறன் அப்புறம் உனக்கு தேவைனா வாங்கிக்கோனு சொல்லி அங்கு இருந்த செவிலியரை அழைத்து இந்த கட்டிலின் கம்பியை மடக்கு குழைந்தை உக்காரணும்னு சொன்னங்க நான் வேண்டாம் என்று மறுக்க செவிலியர் அவர் உள்ளயே வரகூடாது இருந்தாலும் அனுமதிச்சு இருக்கோம் நீங்க கட்டில்ல உக்கார வைக்க சொல்றீங்க என்று சொல்ல அம்மாவுக்கு புசுக்குன்னு கோபம் வந்துடுச்சு உன் கட்டில்ல தான உக்கார கூடாது என் குழைந்த அப்போ என் மடில உக்காரட்டும் உக்காருப்பா என்று என்னை கட்டாய படுத்துகிறார்கள் செவிலியர்கள் ஆயா அப்பிடிலாம் பண்ண கூடாது என்று சொல்ல அம்மா கூப்பிடுடி,, உன் டாக்டர நான் பேசிக்குரன் என் புள்ள உக்கார கூடாதுன்னு சொல்றனு சண்டை இட செவிலியரை ஜாடை காண்பித்து நகர சொல்லி அவசர வேலை இருக்கு அம்மா வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்... அன்று அம்மா அவர்கள் மடியில் நான் அமர வேண்டும் என்று ஆசைபட்டார்கள் முடியவில்ல்லை,, அது தான் நானும் என் அன்பு அம்மாவும் பேசிய நீண்ட உரை அதற்க்கு மேல் என் அம்மா பேசவே இல்லை.. இன்று நான் அம்மா மடியில் தலை சாய்த்து தூங்க வேண்டும் என்று ஏங்குகிறேன்,, ஆனால் அந்த தாய் என்னிடம் இல்லை இன்று வெட்டி எறியப்பட்ட மூங்கிலை போல கிடக்குறேன் ,, இத்தனை ஆண்டுகள் என் வயது பற்றி சிந்திக்கவே இல்லை முதல்முறையாக சிந்திக்கிறேன், என் வயது ஆயுள் சீக்கிரம் முடிந்து என் தாயின் கடைசி ஆசை அவர்கள் மடியில் நான் உக்காரவேண்டும் .. அவர்களோடு சந்திக்கும் நாள் சீக்கிரம் வராதா என்று ஏங்குகிறேன், அண்ணன் , அண்ணி ,மகன்கள் ,மகள், பேரன், அக்கா மகன்கள் ,அக்கா மகள்கள் எல்லோரும் என்னை நம்பி என் கைகளை பற்றி கொன்று நின்றாலும் ஏனோ யாரை பற்றிய கவலையும் எனக்கு வராமல் என் தாயின் அந்த பரிசத்தை உணரவே மனம் ஏங்குகிறது தவிக்கிறது துடிக்கிறது வெறுமையான உலகமாய் இந்த பூமி தெரிகிறது என்ன சொல்ல வலிகளை சொல்ல வார்த்தைகள் அற்று இந்த தருணத்தில் மனம் உடைந்து என் நெஞ்சு குமுறலை உங்களிடம் சொல்கிறேன் ....

தோழர்களே!!!!! பெற்ற தாயை ஒரூ ஒரு மகனும் போற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் அந்த பொக்கிஷம் தொலைந்து போனால் மீண்டும் கிடைக்காது,, இல்லாத கடவுளை தேடி நேரத்தை வீண் அடிக்காமல் இருக்கும் பெரும் தெய்வத்தை பாதுகாத்து அன்பு காட்டுங்குல் இந்த பூமியில் எல்லாம் எளிமையாக சம்பாதிக்கலாம் ,, ஆனால் உன்னதமான தாயின் அன்பை நீங்கள் சம்பாதிக்கவே முடியாது உயிருக்கு உயிரான அண்ணன் அண்ணி அன்பான மனைவி அண்ணன் மகனும் மகளும் என் மகனும் மகளும் அக்கா மகன்களும் மகள்களும் நிறைந்து காணப்படும் இந்த இல்லம் இதோ வெறுமையாக என் தாயின் குரல் ஒலி இல்லாமல் நிசப்தமாக ஏதோ அந்நிய பூமியில் நான் மட்டும் தனியாக இருபதாய் உணர்கிறேன் ...
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை !!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை !!
என்பார்கள் என் தந்தை எனக்கு மூன்று வயது இருக்கும் போதே இறந்து விட்டார்கள் தாயும் தந்தையும் ஆசனுமாய் இருந்த அந்த பெரும் தெய்வத்தை தொலைத்து வெருமையான் வாழ்க்கை வாழ்கிறேன் ,,,,,

நிஜங்களை ஏற்று கொண்டு வாழ கற்று கொள்ள வேண்டும் ஆனாலும் என்னால் கடந்த காலங்களை ஒரு நொடியும் மறக்க இயலாமல் இந்த நாள் கடந்து போகிறது, இதுவும் ஒரு நாள் கடந்து போகும் ஆம் நானும் நீங்களும் கூட கடந்து போவோம் வெறுமையாக ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,அம்மா உனையே தேடுகிறேன் உன் காலடி மண்ணில் நான் வாழுகிறேன் அழுதால் ஆறுமா சொல் அம்மா என் ஆயுள் குறையுதே வா அம்ம்மா ,,,,,,,,,,,,,,,,,,,,,

மடிப்பாக்கம் ச.வெற்றிச்செல்வன் .