முதலில் நான்கு தீர்மானங்களை முன்மொழிந்தார்
1. 2009ஆம்
ஆண்டின் முற்பகுதி மே 18 வரை வன்னிப் பெருநிலத்தில் சிங்கள இனவெறியர்கள்
தமிழினத்திற்கெதிராக நடத்திய இனஅழிப்புப் போரில் படுகொலை செய்யப்பட்ட
விடுதலைப்புலிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் யாவருக்கும்
சர்வதேச இனப்படுகொலை நாளான இன்று விடுதலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த
வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
2. முள்ளிவாய்க்கால்
பேரவலத்திற்குப் பின்னர், போர் முடிந்து விட்டதாகவும் புலிகளை
அழித்துவிட்டதாகவும் இராஜபக்சே கும்பல் அறிவித்தாலும், தமிழினத்திற்கு
எதிரான ஒடுக்குமுறையை இன்னும் கைவிடவில்லை. இளைஞர்கள், இளம்பெண்கள்,
ஊடகவியலாளர்கள், கிறித்துவப் பாதிரியார்கள் மற்றும் சிங்கள சனநாயகச்
சக்திகள் போன்ற ஏராளமானோரைத் தொடர்ந்து கடத்திச் செல்வதும் படுகொலை
செய்வதும் போன்ற கொடுமைகள் நீடித்து வருகின்றன. அத்துடன், பாலியல்
வல்லுறவுகள் போன்ற திட்டமிட்ட கலாச்சாரச் சீரழிவுகள் திணிக்கப்பட்டு
வருகின்றன. சிங்களர் குடியேற்றம், சிங்களர் படைத் தளங்கள், பௌத்த விகார்கள்
போன்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் தாயகம் ஆக்கிரமிக்கப்படுவதும்
தொடர்கிறது. இத்தகைய சிங்களப் பௌத்தப் பேரினவாத ஒடுக்குமுறைகளைத் தடுத்து
நிறுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தமிழினத்திற்குரிய பாதுகாப்பை
வழங்கவும் இந்தியப் பேரரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென
விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
3. இலங்கைத்
தீவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் இனச்சிக்கலுக்கு ஒரே தீர்வு
- நிலையான தீர்வு - தமிழீழம் அமைவது மட்டுமே ஆகும் என்பதை விடுதலைச்
சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக அளவிலும் இந்திய
அளவிலும் இயங்கி வருகிற சில அரசியல் கட்சிகள், "சிங்களரின் ஆட்சியில்
தமிழர்களுக்கு உரிமைகள்' என்கிற வகையில் கருத்துக்களைப் பரப்பி வருகின்றன.
அண்மையில், திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை சென்று வந்த
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அதே கருத்தை வெளியிட்டுள்ளது. இது
மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
இந்நிலையில்,
ஈழ மண்ணிலும், உலக நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிற ஈழத் தமிழர்களிடையே
தமிழீழம் அமைவது தொடர்பாக "பொது வாக்கெடுப்பு' நடத்திட வேண்டுமென இந்தியா
உள்ளிட்ட அனைத்துலக நாடுகளையும் ஐ.நா. பேரவையினையும் விடுதலைச்
சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
4. விடுதலைப்
புலிகள் என்ற அய்யத்தின் பேரில், ஏறத்தாழ பனிரெண்டாயிரம் பேர், குறிப்பாக
இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், புலிகளின் முன்னணித் தலைவர்களோடு
சிறைப்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் கொடூரமான வதைகளுக்கு
ஆளாக்கப்பட்டு வருவதாகவும், படுகொலைகள் செய்யப்படுவதாகவும் ஊடகங்களின்
வழியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கொட்டடிச் சிறைகளில்
கொடுமைகளுக்குள்ளாகும் அனைவரையும் மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டுமென ஐ.நா. பேரவைக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
மேற்கண்ட 4 தீர்மானங்களையும் முன்மொழிந்தவுடன் அவற்றை நிறைவேற்றும்விதமாக அனைவரும் பலத்த கையொலி எழுப்பினர்.
மே 18 சர்வதேச இனபடுகொலை நாள் இன்று அப்போரில் வீரமரணமடைந்த அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது .
இதற்குமுன்
பேசிய தோழர்கள் அனைவரும் இங்குள்ள போலி தமிழ் தேசியவாதிகளால்
விமர்சிக்கபடுகிறோம் என்கிறார்கள் ,விமர்சினத்தை பற்றி கவலைப்படாதவர்கள்
விடுதலைச் சிறுத்தைகள் , ஆனால் அத்தகைய விமர்சனங்கள் வைப்பவர்கள் யார்
என்பதால்தான் இதனை மேடையில் பேசவேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டில்
இருப்பவர்களோ அல்லது வேறுநாட்டில் போய் தங்கி சொகுசாக வாழ்ந்து
வருகின்றவர்கள் விடுதலை புலிகளுக்கு இதுபோன்ற பாதகங்களை விளைவிக்கும்
செயலில் ஈடுபடுகிறார்கள், இதுபோன்றவர்கள் சாதி ஒழிப்பு மன்றத்தில்
வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் நான் காணவில்லை , இன்றைக்கு எவனாவது
ஒருவன் மேடையில் அமர்ந்து புலிகளை பற்றியோ பிரபாகரனை பற்றியோ ஒரு பாடல்
பாடிவிட்டால் உடனே அவன் ஈழ போராளி என்று அறிவித்துவிடுகிறான் , எவனாவது
ஒருவன் நான்கு சுவர்ரிடையில் உட்கார்ந்து ஈழ அவலத்தை பற்றி பேசினாலோ தன்னை
ஈழ போராளி என்று பீற்றிகொள்கிறான் , எவனாவது மேடையில் ஏறி பேசிவிட்டால்
தன்னை ஈழ போராளி என்று பகிரங்கபடுத்தி கொள்கிறான் , ஆனால் களத்திலே 25
ஆண்டுகாலமாக மக்களை திரட்டி போராடிக்கொண்டு இருக்கிற வெகுமக்கள் இயக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் என்பதை தமிழ்தேசிய தலைவர் நன்கு அறிவார் ஆகவே இன்று
எவனாவது ஒருவன் யாரோ ஒருத்தர் வளர்ச்சி பிடிக்காமல் காழ்புணர்ச்சி
அடிபடையில் மேடையில் பேசுகிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள் என்பதற்காக
ஒருபோதும் நாம் சோர்வடையகூடாது
தமிழ்நாட்டில் விடுதலை புலிகளை
ஏற்றுகொள்ளவோ அங்கீகரிக்கவோ தயங்கியபோது விடுதலைச் சிறுத்தைகள்
தமிழனத்திற்கான இயக்கம் தமிழ்ஈழத்திற்கான இயக்கம் என்ற
அடிப்படைக்கொண்டதால் 2002 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநாட்டிற்கு அழைத்தவர்
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள், 2002 ஆம் ஆண்டிலேயே அவர் என்னை
அழைத்து நான் விடுதலை புலிகளுக்கு ஆதரவானவன் என்று கூறியவர் .
டெசோ அமைப்பில் நீங்கள் ஏன் இல்லை என பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள்
டெசோ
என்பது தமிழ்ஈழ ஆதரவு கூட்டமைப்பு இதை 80 களில் ஆரம்பித்து பின்
நிறுத்தப்பட்டு ,இப்போது ஆரம்பித்து இருக்கிறார்கள் . நான் அப்போது
சொன்னேன் இது திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து செயல்படுவதால் , திராவிட
முன்னேற்ற கழக கோட்பாட்டுக்கு உடன்பட்டு ,ஒருகினயிந்து சென்றால் அவர்கள்
என்னை அழைப்பார்கள் அமைப்பில் சேர்த்துகொள்வர்,அகவே டெசோ அமைப்பில் நாம்
அழைக்கப்படவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை என்பதிலிருந்து நாட்டிலே நாம்
எப்படியிருகிறோம் என்பதை அறிந்து கொள்விர்கள் இதுதான் உங்களுக்கு வைக்கிற
வேண்டுகோள்
நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் திருமாவளவனுக்கு
இடமில்லை ,தமிழ்தேசிய தலைவர் அம்மா அவர்கள் இறுதி சடங்கிற்கு
அஞ்சலிசெலுத்த சென்றபோது அனுமதியில்லை ,டெசோ அமைப்பில் விடுதலைச்
சிறுத்தைகளுக்கு இடமில்லை இந்த மூன்று நிகழ்வுகளையும் ஒப்பிட்டுபாருங்கள் .
பிரபாகரன்
தந்தை இறப்பிற்கு சென்றுவந்தேன் அஞ்சலி செலுத்தினேன் ,தயார் இறப்பிற்கு
சென்றபோது என்னை விமான நிலையத்தில் மறித்து சுமார் ஒன்றரை மணிநேரம்
அமரவைத்து அவமானப்டுத்தி திருப்பி அனுப்பியது சிங்கள அரசு .
ராஜபக்சேவோடு
கைகுலுக்குகிறார் திருமாவளவன் ,அவனோடு சிரிக்கிறான் திருமாவளவன்
,ராஜபக்சேவோடு போய் விருந்து சாப்பிட்டான் திருமாவளவன் அதுதான் பெரிய
இழிநிகழ்ச்சி ,இதனால் தான் ஈழமே கிடைக்கவில்லை ,அதனால் தான் போர்நிறுத்தம்
நிகழாமல் போய்விட்டது , நான் மட்டும் போகாமல் இருந்திருந்தால் ராஜபக்சேவோடு
கைகுலுக்காமல் ,சிரிக்காமல் இருந்திருந்தால் இவர்கள் நினைத்ததை சாதித்தது
இருப்பார்கள் என்று சொல்லிக்கிறார்கள்.
அகவே ரஜெபக்செவோடு
திருமாவளவனுக்கு புரிதல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு புரிதல் இருந்தால்
எனக்கு சிவப்பு கம்பளம் விரித்து அல்லவா அவன் என்னை வரவேற்றிருக்க வேண்டும்
, திருமாவளவன் விமானநிலையத்தில் ஓர் ஓரமாக அமரவைத்து காரணம் சொல்லாமல்
கடைசிலே இங்கே உள்ளே போக அனுமதியில்லை என்று திருப்பி அனுப்பியபோது
ராஜபக்சேவுக்கும் விடுதலைச் சிறுத்தைக்கு உள்ள உறவு புரிதல் நாம் புரிந்து
கொள்ளமுடியதா அதாவது வேண்டாம் என்கிறான் திருப்பி அனுப்பு என்கிறான் எனவே
விடுதலைச் சிறுத்தைகள் என்றைக்கும் விடுதலை புலிகள்தான் , விடுதலை
புலிகளோடு களத்திலே நிற்பவர்கள் என்று அவர்களுக்கு தெரிகிறபோது இந்த
மரமண்டைக்கு தெரியவில்லை.
நான் நாடாளுமன்ற குழுவில்
சென்றபோது அவர்கள் என்னை பார்த்து அதோ வந்துருக்கிறான் திருமாவளவன் என்று
சொல்கிறது ரஜெபக்சே கும்பல் , நான் நான்காவது ஆளாக உட்கார்ந்து இருக்கிறேன்
என்னை அவர்களுக்கு தெரியாது என்று நினைத்தேன் ஆனால் அவர்களோ விடுதலை
புலியாகவும் ஆதரவளவனகவும் என்னை பார்த்தார்கள் , அங்கே அமர்ந்திருந்த
அனைவரும் அவர்களுக்கு ஆதரவாக நினைத்தவர்கள் என்னைமட்டும் விடுதலை புலி
ஆதரவாளனாக ராஜபக்சேவுக்கு தெரிகிறது , அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம்
எடுத்தபோது அவனே வலியவந்து இன்முகத்தோடு புகைப்படம் எடுத்துகொள்கிறான்
அப்போது சொல்கிறான் இவர் யார் தெரியுமா பிரபாகரனுக்கு மிகவும்
பிடித்தமானவர் நல்லவேளை இவர் யுத்தம் நடந்தபோது பிரபாகரனுடன் இல்லை
இருந்திருந்தால் இவரும் மேலே போயிருப்பார் என்று சொல்கிறான் அகவே அவன் என்ன
நினைத்துஇருக்கிறான் திருமாவளவன் அவ்வளவு நெருக்கம் பிரபாகரனிடத்தில் இது
நடந்த பொது அங்கேயிருந்த அனைவரும் நகைசுவையாக கூறுகிறான் என்று நகைத்தபோது
நான் அவை நாகரீகம் கருதி வெளியேறினேன் , இதில் என்ன இருக்கிறது இதை
காழ்புணர்ச்சி கொண்ட கும்பலுக்கு திருமாவளவன் மட்டும் தான் முன்னிலையில்
இருக்கிறான் என்ற என்னமோ .. அப்படிப்பட்ட ராஜபக்சே நான் பிரபாகரன் தாயார்
இறந்தபோது விமானநிலையத்தில் பிடித்து திருப்பியனுப்புங்கள் என்று உத்தரவு
போட்டுயிருகின்றான்.
இங்கே திருமாவளவன் காங்கிரசுக்கு
நெருக்கமாகவும் ,சோனியா காந்திக்கு நெருக்கமாகவும் இருக்கிறான்
,ராஜபக்சேவோடு நெருக்கமாக இருக்கிறான் என்றால் என்னை அனுமதிக்கப்பட்டு
இருப்பார்கள் , ஏனென்றால் டக்லஸ் தேவானந்தா போன்ற ஆதரவாளர்கள் , கருணா
போன்ற ஆதரவாளர்களுக்கும் ரஜெபக்சே வேண்டியதை செய்கிறார் செய்துகொண்டும்
இருக்கிறார்.
அப்போ திருமாவளவன் காங்கிரசுக்கு நெருக்கமாக
இருக்கிறான் என்றால் நாடாளுமன்ற குழுவில் சுஷ்மா சுவராஜ் அடுத்ததாக
இரண்டாவது ஆளாக என்னை சேர்த்துஇருப்பார்கள் அகவே சோனியா காந்திக்கு
தெரிகிறது திருமாவளவன் யாரென்று ,காங்கிரஸ் கட்சிக்கு தெரிகிறது
திருமாவளவன் யாரென்று இங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லையா . திருமாவளவன்
தமிழீழத்திற்கு ஆதரவானவன் அதில் உறுதியாக இருப்பான் என்று சோனியா
காந்திக்கு தெரிகிறது இங்குள்ள போலி தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லையா.
திருமாவளவன்
தமிழீழத்திற்கு ஆதரவானவன் அதில் உறுதியாக இருப்பான் என்று சோனியா
காந்திக்கு தெரிகிறது இங்குள்ள போலி தமிழ்தேசியவாதிகளுக்கு தெரியவில்லையா
சோனியாகாந்திக்கு
தெரியும் அங்கெ இவனை அனுபிருந்தால் கேமரா எடுத்துக்கொண்டு போய் விடியோ
எடுப்பான் அதை கேசட்டாக வெளியிடுவான் மறுபடியும் கூட்டம் போட்டு
அம்பலபடுத்துவான் ,காங்கிரசுக்கு எதிராக பேசுவான் ரஜெபக்செவுக்கு எதிராக
ஊருஊரக பேசுவான் என்று நினைத்து காங்கிரஸ் கட்சி முடிவுசெய்கிறது
தமிழகத்தில்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மூன்று கட்சிகள்தான் உள்ளன , திமுக
,விடுதலைச் சிறுத்தைகள் ,காங்கிரஸ் , காங்கிரஸ் இதில் சேர்க்க முடியாது
இதில்
திமுக ,விடுதலைச் சிறுத்தைகள் தமிழகத்தில் . தமிழீழத்தை
முன்வைப்பது விடுதலைச் சிறுத்தைகள் என்பது நாடறிந்த உலகமறிந்தது.
அப்படியேன்றால் திருமாவளவனை அழைத்து நாம் இப்படி அமைப்பை தொடங்கலாம்
அமைக்கலாம் என்றல்லவா கலைஞர் கேட்டுருக்கவேண்டும் , ஏன் திருமாவளவனுக்கு
தகவலில்லை ஏன் அழைக்கவில்லை என்று எவனாவது விவாதித்து இருகிறனா இல்லை .
விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து வெளிபடையாக ஆதரித்து வருகிறார்கள்
,திருமாவளவன் மிக சரியாக பேசுவான் அது கலைஞருக்கு நன்றாக தெரியும்.
நாடாளுமன்ற குழுவில் திருமாவளவனுக்கு இடமில்லை என்று முடிவு எடுக்கபடுகிறது
என்றால் இதில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும் இந்த நிலைப்பாடு
பொறுத்தவரையில் விடுதலைச் சிறுத்தைகள் எப்படி நடந்துகொள்கிறது என்பதை
கலைஞர் புரிந்துகொண்டுஇருக்கிறார் உணர்ச்சியற்ற மரமண்டைக்கு புரியவில்லை
சொல்லிக்கொள்ள கடமைபட்டவனாக இருக்கிறேன்
விடுதலைச்
சிறுத்தைகள் 25 ஆண்டுகளாக எப்படி போராடுகிறார்கள் எப்படிசெயல்படுகிறார்கள்
நேர்மையாய், தூய்மையான களப்பணியில் இருகிறார்கள் என்றுதெரியும் ஆனா
திருமாவளவனுக்கு எதிர்ப்பு சொல்லவும் விடுதலைச் சிறுத்தைகளை எதிர்க்கவும்
மட்டும் கொண்ட கீழ்த்தரமான சிந்தனைகொண்டவர்களால் தான் இத்தகைய செயலில்
ஈடுபட்டுவருகிறார்கள் , இவர்களெல்லாரும் சான்றிதழ் கொடுப்பதற்காகவே நான்
களத்தில் இல்லை ,இன்றைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் விடுதலைச்
சிறுத்தைகளுக்கும் உறவு நெருக்கமாக ,இணக்கமாக இருக்கிறது .
இங்கே
இருப்பவர்கள் பொதுஇடத்தில் கொடியேற்றகூடாது , மார்வாடி தமிழகத்தை விலைக்கு
வாங்கலாம் ,பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தையே சுறையடலாம் , யார்
வேண்டுமானாலும் இங்கு வந்து குடியேறலாம் ஆக்கிரமிப்பு செய்யலாம் ஆனால்
தலித்துகள் போது இடத்தில கொடியேற்றகூடாது என்கிற அளவில்தான் சாதிவெறி
அமைப்புகளும் இயக்கங்களும் தமிழகத்தில் கட்சிநடத்துகின்றன என்பதே
புரிந்துகொள்ளவேண்டும் , தமிழ்நாடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று
கேட்கிற தலைவர் இல்லை , சாதிவாரி நடக்கிறபோது அவரவர் அறிவித்துகொள்கிறார்
எங்கள் சாதி இது எங்களுக்கு உட்சாதி கிடையாது ,எங்களுக்கு பொதுப்பெயர் இது
என்று குறிப்பிடவேண்டும் . தமிழர்களின் நிலையை கண்டு வெட்கபடுகிறேன்
வேதனைபடுகிறேன் வெளிபடையாக , இவர்கள் மாநாட்டில் , கூடங்களில் பேசும்பொழுது
வெளிபடையாக சாதிவெறியை தூண்டுகிறார்கள் எத்தனையோ பேர் பாலியல்
வன்புணர்வுக்கு துன்புறுத்தபடுகிறார்கள் ஆயிரகணக்கான ஆண்டுகளாக
சகித்துகொண்டு இருகிறார்கள் இந்த ஒடுக்கப்பட்ட சமூகம் .
அம்பேத்கர்
கார்டூன் பற்றி தொலைகாட்சியில் பேசஅழைக்கிறார்கள் அப்படி அழைக்கும்போது
அவர்கள் என்னபேசுகிறார்கள் என்றால் தலித்துகளுக்கு சகிப்பு தன்மை இல்லை ,
இதனை ஆண்டுகளாக இல்லாமல் நாடாளுமன்றத்தில் இதைபோய் பிரச்சினையாக்கிறார்கள்
என்றார்கள் . அவர்களை பார்த்து நான் கேட்கிறேன் ஓராண்டு ஈராண்டு அல்ல
பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக கொத்தடிமையாய் இம்மண்ணில் எவ்வளவோ இழிவுகளையும்
எவ்வளவோ வன்கொடுமையும் சகித்துக்கொண்டு , குடிசை கொளுத்துகிற உனக்கே
ஓட்டுபோடுகிறோம் ,பாலியல் வன்புறுத்தல் செய்கிற உனக்கே ஓட்டுபோடுகிறோம் ,
உன்னையே தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறோம் 2000 ம் வருடங்களாக வீதியில்
நடக்கக்கூடாது ,போதுகிணற்றில் தண்ணீர் எடுக்ககூடாது ,துண்டை தோளில்
போடக்கூடாது என்பவற்றையேல்லாம் பொறுத்துக்கொண்டு எவளவோ சகித்துக்கொண்டு
இருக்கிறது ,இந்த சமூகத்திற்காகதான் விடுதலைச் சிறுத்தைகள் போராடிவருகிறது.
டாக்டர்
அம்பேத்கர் அவர்கள் சட்ட ஆலோசனை குழு தலைவராக தேர்ந்தடுக்கபட்டது
பதிவாகவில்லை, எத்தகைய குழுக்களால் நியமிக்கப்பட்டார் பதிவாகவில்லை
அவற்றிற்காக கண்விழித்து எத்தனை நாள்கள்,மாதங்கள் ,வருடங்கள் உழைத்தார்
பதிவாகவில்லை இந்த வரலாற்று உண்மையெல்லாம் மறைத்து விட்டு அவர் தாமதமாக
சட்டம் இயற்றினார் என்பதை மட்டும் காட்டியுள்ளனர் . இப்போது ஏன் கேட்கிறோம்
என்கிறார்கள் இது 1949 வரையபட்டபோது பார்க்கவில்லை 1999, 2001, 2011
களில் பார்க்கவில்லை இபோதுதான் பார்க்கும்போது கேட்கிறோம்.
இரண்டாயிரம்
வருடங்களாக வாக்குரிமை ,இடஒதுக்கீடு கேட்கவில்லை இப்போது கேட்கிறோம்
கேட்டால் அது எவ்வளவு முட்டாள்தனமானது . ஒரு மாதத்திற்கு முன்பே இந்த
செய்தி எனது கவனத்திற்கு வந்தது நான் அந்த புத்தகத்தை வாங்கிபார்த்தபோது
இதை எப்படி எதிர்ப்பது என்ற குழப்பத்தில் இருந்தோம் , உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்வது தொடர்பாக வழக்கறிஞர்கள் இடத்தில பேசினோம் , நமது தம்பிகள்
கண்ணியமாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள் ,நாடாளுமன்றத்தில் எப்படி
எழுப்புவது என்ற திட்டத்தை தொடங்கினேன் இரண்டாம்கட்ட நாடாளுமன்றகூட்டம்
நடந்தபோது தோழர்களின் காதணிவிழா,திருமணவிழா அழைப்பின் பேரில்
நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை 9 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு சென்றேன்
10ஆம் தேதி பிரச்சினையை எழுப்புவதாக இருந்தேன் முடியவில்லை அதற்கு
அடுத்தநாள் இடஒதுக்கீடு சம்பந்தமான மசோதா அன்றைக்கு கேட்கலாம் என்று
இருந்தேன் முடியவில்லை இறுதியாக வெள்ளிகிழமை அடுத்த இரண்டு நாள்கள்
விடுமுறை எனவே இன்றைக்காவது பிரச்சினையை எழுப்புவது தொடர்பாக நாடாளுமன்றம்
சென்றேன் புத்தகம் கையில் இல்லை வாங்க சென்ற தோழர்கள் இன்னும் வரவில்லை ,
எனவே கணிணியில் படிவமாக்கப்பட்ட ஐ பாட்டில் எடுத்துக்கொண்டு இறுதியில்
சபாநாயகர் மீராகுமாரிடம் சென்றேன் இதை காட்டி முறையிட்டேன் பொன்விழா
ஆண்டில் இப்படி ஒரு அவமானம் என்று ஏறத்தாழ பதினயிந்து நிமிடங்கள் அவையில்
நான் மட்டும் கூச்சல் போடுகிறேன் ,அதிமுக காங்கிரஸ் கட்சிகள் வேறு
பிரச்சினைக்காக கூச்சல் போட்டுக்கொண்டு இருகின்றன இந்நிலையில் மீரா குமார்
அருகில் சென்று தனியாளாக கூச்சல் போடுகிறேன் , அம்பேத்கரை அவமானபடுத்துவது
இந்த தேசத்திற்கே அவமானமாகும் பொன்விழா ஆண்டில் இத்தகைய நிலைமை என்று
கூறினேன் , மீரா குமார் அவர்கள் இருக்கையில் அமரசொன்னார் நான் என்
இருக்கைக்கு வந்தபோது அப்போதுதான் அந்த புத்தகத்தின் நகல் எடுத்துவரப்பட்டு
என்னிடம் தோழர்கள் கொடுத்தார்கள் , நான் உடனே அனைத்து உறுப்பினர்களிடம்
கொடுத்தேன் ,நெருப்பு பற்றிக்கொண்டது போல் பற்றிக்கொண்டது மக்களவை நம்மால்
ஒரு வரலாறு மாறபோகிறது என்று நினைத்து கொண்டேன் அங்கு ஒரு புயல் வீசியது
போல் இருந்தது , ஒட்டுமொத்தமாக இருந்ததைவிட முழக்கமிட்டேன் அதை பார்த்து
அருகில் இருந்த இஸ்லாமிய தோழர்கள்,குருதத்தா போன்றவர்கள் கட்சி
பாகுபாடின்றி ஆதரவளித்தனர் முழக்கமிட்டனர் .
அதன்பிறகுதான்
தோழர்களே என்னை பேச சொன்னார்கள் நான் சொன்னேன் இது அம்பேத்காருக்கு மட்டும்
இழிவில்லை நேருவுக்கும் இழிவு ,இந்த தேசத்திற்கும் இழிவு என்று கூறினேன் .
அதன் பிறகுதான் அமைச்சர் வந்தார் அந்தபுத்தகம் திரும்ப பெறப்படும் என
அறிவித்தார் ,இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கூறினார்
இதெல்லாம் ஒரு மணிநேரத்தில் நடந்தது . இரண்டு மாதகாலமாக மராட்டிய மண்ணிலும்
தமிழகத்திலும் போராட்டம் நடந்தது எந்த பலனும் இல்லை மக்களவையில் பிரச்சினை
எழுப்பியபோது இவ்வவளவு பெரியநிலை என்பதை அறிந்து திரும்பிப்பார்க்க
வைத்துவிட்டது.
இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால்
இப்பிரச்சினையை எழுப்பியபோது வடஇந்திய எம்பிக்கள் ஆதரவுதந்தபோது தமிழ்நாடு
எம்பிக்கள் ஆதரவளிக்க முன்வரவில்லை உள்ளபடியே வெட்கபடுகிறேன் நான்
வேதனைபடுகிறேன் இப்படிப்பட்ட சாதி வெறியர்களிடம் இருந்துதான் நாம் சாதி
ஒழிப்பையும் தமிழ்தேசியத்தையும் முன்னுருத்தி செல்கின்றோம் . எந்த
கொம்பனாலும் நம்மை வீழ்த்தமுடியாது , நம் சுவர் விளம்பரத்தையும் விளம்பர
பலகைகளையும் அழிகிறார்கள்,பெரியாரை முன்னிலை படுத்துகிற திராவிடக்கட்சிகள்
தான் இதில் திராவிடர் கழகம் மட்டும் நமது கருத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள்
,இப்படிப்பட்டவர்களிடம் தான் தமது வாதங்களை வலிமைபடுத்தி கொள்ளவேண்டும்
.இன்னொருவர் நடத்துகிற தொலைக்காட்சியில் செய்திகளாக இல்லை ,இன்னொருவர்
நடத்துகிற செய்திதாள்களில் செய்திகளாக இல்லை ஆனால் இத்தகைய பிரச்சினையால்
தம்முடைய இடத்தினை தட்டி பறித்துவிட முடியாது ,நாம் முன்னிருந்து
நடக்கின்றோம் , நாம் blogs , facebook , website என்று ஒவ்வொருவரும் தனியாக
தொடங்கி கருத்தியல்ரீதியாக முன்னெடுத்துச் சென்று இணையதலமூலமாக வலிமை
படுத்துவோம் இதனை யாராலும் தடுத்துவிடமுடியாது , விடுதலைச் சிறுத்தைகளின்
உழைப்பு வீணாகிவிடகூடாது ,விடுதலைச் சிறுத்தைகளின் தியாகம் வீணாகிவிடகூடாது
.
அங்கெ தமிழீழ ஆட்சி அமைகிறவரையில் தமிழீழ கொடி
பறக்கிறவரையில் மீண்டும் விடுதலை புலிகள் ஆட்சி நிறுவுகிறவரையில் விடுதலைச்
சிறுத்தைகள் விடுதலை புலிகளாய் களத்தினிலே போராடுவோம் என்று இந்த மே 18
இனப்படுகொலை நாளில் உறுதியேற்போம் என்று எழுச்சித் தமிழர் வீரவணக்க
உரையாற்றினார் .