இந்தத்தேசம்! என்னை தீண்டப்படாதவன் என்று இழிவுப்படுத்தியிருக்கிறது.
தலைவர்தொல். திருமாவளவன்
இந்த தேசம் எனக்கு எதிராக இருந்தால் இந்த தேசத்திற்க்கு எதிராக செயல்படுவதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் கடமை, அதிலே நான் அச்சப்படமாட்டேன். எனக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போராடுவதுதான் என் வேலை; என் இயக்கத்தின் வேலை! தேசம் எனக்கு துரோகம் இழைத்தால் நான் தேசத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என்னை பறையர் என்று முத்திரை குத்தியிருக்கிறது இந்தத் தேசம்! என்னை தீண்டப்படாதவன் என்று இழிவுப்படுத்தியிருக்கிறது இந்தத் தேசம்! என் குடியிருப்பை சேரி என்று ஒதுக்கிவைத்திருக்கிறது இந்தத் தேசம்! பரம்பரை பரம்பரையாய் கல்வி மறுக்கப்பட்டு, என்னை வஞ்சித்திருக்கிறது இந்த தேசம்! இந்த தேசத்திற்கு நான் நன்றிச்செலுத்த முடியுமா? இந்த தேசத்திற்கு நான் அடிமைப்பட்டுகிடக்க முடியுமா?
Sunday 31 July 2011
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சி
பழங்குடி மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்டுகிடக்கின்ற மக்களுக்காகவும் மட்டுமின்றி இசுலாமிய சிறுபான்மை மக்களுக்காகவும், கிறித்துவ சிறுபான்மை மக்களுக்காகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமின்றி புலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் சொந்தங்களுக்காகவும் குரல் எழுப்புகின்ற ஒரே கட்சி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
பழங்குடி மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்டுகிடக்கின்ற மக்களுக்காகவும் மட்டுமின்றி இசுலாமிய சிறுபான்மை மக்களுக்காகவும், கிறித்துவ சிறுபான்மை மக்களுக்காகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமின்றி புலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் சொந்தங்களுக்காகவும் குரல் எழுப்புகின்ற ஒரே கட்சி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
Saturday 30 July 2011
தலித் மக்களின் தாயத்து
விடுதலைச் சிறுத்தைகள் இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் இயக்கம் மட்டுமல்ல. அது இங்கே இருக்கின்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவருக்குமான அரசியல் தளமாக மாறியிருக்கிறது. இதுவரை புறக்கணிக்கப்பட்டு எந்த அரசியல் கட்சியாலும் கவனிக்கப்படாது ஒதுக்கப்பட்ட குறவர்கள், அரவாணிகள்,மீனவர்கள் முதலானவர்களையும் அரவணைத்து அவர்களையும் அரசியல் சக்தியாக எழுச்சிபெறச் செய்திருக்கிறது. இத்தகைய அணுகுமுறையால்தான் இன்று தமிழக அளவில் புறக்கணிக்கப்பட முடியாத அரசியல் சக்தியாக அது வளர்ச்சி பெற்றிருக்கிறது.இதற்கு முழுமுதல் காரணம் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்தான்.
தலித் மக்களின் தாயத்து புத்தகத்தில் இருந்து
மடிப்பாக்கம் ச.வெற்றிசெல்வன்
தலித் மக்களின் தாயத்து புத்தகத்தில் இருந்து
மடிப்பாக்கம் ச.வெற்றிசெல்வன்
நண்பன் படப்பிடிப்பில் விஜயிடம் கையெழுத்து வாங்க காத்து இருந்த பொழுது
நண்பன் படபிடிப்பில் வி.சி.க. தொண்டர்கள் sendru நின்ற பொழுது , நன்பர்களே சந்திரசேகர்ரின் பொய்யான பேச்சு பாருங்கள்
பெயர் மாற்றம் என்பது வெறும் மொழி அடையாளமோ அல்லது மீட்சியோ அல்ல; அது ஒரு இனத்தின் வரலாற்று மீட்சி ஆகும்.
தலைவர்: தொல்.திருமாவளவன்
தமிழ்ப் பெயர்கள்தான் சாதி, மத, அடையாளமில்லாதவை. ஆகவே, இந்துப் பெயர்களை மாற்றி , தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக்கொள்வது தமிழையும் தமிழினத்தையும் மீட்சி பெறச் செய்யும் என்பதுடன் மத சார்பின்மையும் பாதுகாக்கப்படும்; சாதி ஒழிப்பும் முன்னெடுக்கப்படும். பெயர் மாற்றத்தால் என்ன புரட்சிகர மாற்றம் நேர்ந்து விடப்போகிறது என்று கேள்வி எழலாம். பெயர்மாற்றம் என்பது வெறும் மொழிக்கான அடையாளம் அல்ல ; அது ஒரு வரலாற்று மீட்சிக்கான அடையாளம் . அதனால்தான் துருக்கியை மறுகட்டமைப்புச் செய்த'முஸ்தபா கமால் பாட்சா' மனிதர்களின் பெயரை மட்டுமல்ல, ஊர்களின் பெயர்களையும் மாற்றினான்.இன்று உலகில் பல்வேறு நாடுகளின் பெயர்களும் அந்த அடிப்படையிலேதான் மாற்றம்பெற்றுள்ளன . அண்மையில் பர்மா, மியான்மரானதும் அப்படியே. இந்தியாவில், பம்பாய் மும்பையானதும், கல்கத்தா,கொல்கத்தாவானதும் மெட்ராஸ் சென்னையானதும்கூட இந்த அடிப்படையில்தான். ஆகவே, பெயர் மாற்றம் என்பது வெறும் மொழி அடையாளமோ அல்லது மீட்சியோ அல்ல; அது ஒரு இனத்தின் வரலாற்று மீட்சி ஆகும்.
அடங்க மறு புத்தகத்திலிருந்து
மடிப்பாக்கம் - ச.வெற்றிச்செல்வன்
உலகத்தமிழ் இயக்கங்களின
உலகத்தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு
ஈழப்போரின் போது போர்க்குற்றம் செய்த இராசபக்சே மீது இந்தியப்பேரரசு நடவடிக்கை எடுக்க தில்லியில் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது .
ஈழப்போரின் போது போர்க்குற்றம் செய்த இராசபக்சே மீது இந்தியப்பேரரசு நடவடிக்கை எடுக்க தில்லியில் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது .
Friday 29 July 2011
தனியொருவனுக்குச் சனநாயகமில்லையெனில் மதங்களை அழித்திடுவோம்!
தனியொருவனுக்குச் சனநாயகமில்லையெனில் மதங்களை அழித்திடுவோம்! தலைவர்: தொல்.திருமாவளவன்
ஒருவன் இந்துவாயினும் இசுலாமியனாயினும் அவனுக்குச் சனநாயகம் என்பது அடிப்படை உரிமையாகும். அத்தகைய சனநாயகத்தை ஒருமதம், இன்னொரு மதத்தைச் சார்ந்தவனுக்கு மறுக்குமேயானால்-தடுக்குமேயானால் அந்த மதம் எதற்கு? மதங்கள் மனிதனால் கற்பிக்கப்பட்டவையே தவிர கடவுளால் படைக்கப்பட்டவையல்ல! சனநாயகமே மானுடத்தை வழிநடத்தும் மகத்தான மதம்! மனித நேயமே உலகத்தை வாழவைக்கும் சிறப்பான வேதம்! இவற்றை மறுக்கும் மற்றவையனைத்தும் மானுடத்தின் சேதம்! ஆக,தனியொருவனுக்குச் சனநாயமில்லையெனில் மதங்களை அழித்திடுவோம்!
Subscribe to:
Posts (Atom)